முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கனில் பெண்களுக்கு மீண்டும் கசையடி தண்டனை அமல்படுத்தும் தலிபான்கள்

சனிக்கிழமை, 30 மார்ச் 2024      உலகம்
Afghanistan-women-2024-03-30

காபூல், ஆப்கானிஸ்தானில் ஆட்சி செய்து வரும் தலிபான்கள், இனி தங்கள் நாட்டில் திருமணத்தை மீறிய உறவில் ஈடுபடும் பெண்களுக்கு கசையடி கொடுத்தல், கல் எறிந்து கொல்லுதல் போன்ற தண்டனைகள் நிறைவேற்றப்படும் என்று அறிவித்துள்ளனர்.

கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் வெளியேறின. அதன் பின்னர் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். இஸ்லாமியர்களின் ஷரியத் சட்டத்தின்படியே ஆட்சி என்று அறிவித்தனர். 

அதே வேளையில், கடந்த முறையைப் போல் ஆட்சி இருக்காது. பெண் கல்வி, பெண் சுதந்திரம் பேணப்படும், உலக நாடுகளுடன் நட்புறவு ஏற்படுத்தப்படும் என்று உறுதியளித்தனர். ஆனால், தலிபான்களின் ஆட்சி அவ்வாறாக நடைபெறவில்லை. அங்கு தற்போது வறுமையும், பசியும், நோயும் மட்டுமே மிஞ்சியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து அவசர கதியில் அமெரிக்க, நேட்டோ படைகள் கிளம்பின. இதனால், அங்கு ஆட்சியை எளிதில் கைப்பற்றினர் தலிபான்கள். ஆனால் எமிரேட்ஸ் ஆப் ஆப்கானிஸ்தான் என்று பெயரை மட்டுமே அவர்களால் மாற்ற முடிந்ததே தவிர ஆட்சி மாற்றத்தினால் ஆக்கபூர்வமாக நாட்டிற்கு எதுவும் செய்ய முடியவில்லை என்பதே மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

இந்நிலையில், அரசு தொலைக்காட்சியில் தலிபான் முல்லா ஹிபத்துல்லா அகுந்த்ஸதா வெளியிட்ட அறிவிப்பில், 

பெண்களுக்கு பொது இடத்தில் வைத்து கசையடி, கல்லடி வழங்கும் நடைமுறை மீண்டும் அமலுக்கு வரும் எனக் கூறியுள்ளார். அதில் அவர் சர்வதேச சமூகம் ஆப்கன் பெண்களின் உரிமைகள் பற்றி பேசி வருகின்றன. அது ஷாரியத் சட்டத்துக்கு எதிரானது. 

பெண்களைக் கல்லால் அடித்துக் கொன்றால் அது பெண் உரிமைக்கு எதிரானது என நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால், விரைவில் நாங்கள் அதை நடைமுறைப்படுத்த போகிறோம். திருமணத்தை மீறிய உறவில் ஈடுபடும் பெண்களை நாங்கள் கல்லால் அடித்தும், கசையடி கொடுத்தும் கொல்லும் நடைமுறையைக் கொண்டு வரப் போகிறோம். 

பொதுமக்கள் முன்னிலையில் இந்தத் தண்டனை நிறைவேற்றப்படும். காபூலை கைப்பற்றியதோடு தலிபான்களின் வேலை முடிந்து விடவில்லை. இப்போதுதான் அது தொடங்கியுள்ளது. இவ்வாறு அவர் அந்த  அறிவிப்பில் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து