முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிகிச்சை கிடைக்காமல் காத்திருந்ததால் இங்கிலாந்தில் வாரத்திற்கு 250 நோயாளிகள் மரணம்

திங்கட்கிழமை, 1 ஏப்ரல் 2024      உலகம்
England 2024-04-01

Source: provided

லண்டன் : இங்கிலாந்தில், நீண்டநேரம் சிகிச்சை கிடைக்காமல் வரிசையில் காத்திருந்ததில், கடந்த ஆண்டு வாரம் ஒன்றிற்கு, சராசரியாக 268 பேர் உயிரிழந்து உள்ளனர்.

இங்கிலாந்து நாட்டில் அவசரகால சிகிச்சை கிடைக்காமல் நோயாளிகள் உயிரிழப்பது பற்றி ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. அதில், அதிர்ச்சிகர தகவல்கள் வெளிவந்தன. இதுபற்றி அவசரகால மருத்துவத்திற்கான ராயல் கல்லூரி ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. இந்த விவரங்களை இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவை துறை வெளியிட்டு உள்ளது. இதன்படி, அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் அந்த வார்டுக்கு வெளியே நீண்டநேரம் வரை வரிசையில் காத்திருந்து உள்ளனர். இப்படி காத்திருக்கும் நேரம் அதிகரித்தும், உரிய நேரத்தில் சரியான சிகிச்சை கிடைக்காமல் போயும், கடந்த ஆண்டில் எண்ணற்றோர் மரணம் அடைந்துள்ளனர்.

இதன்படி, நீண்டநேரம் சிகிச்சை கிடைக்காமல் காத்திருந்து, கடந்த ஆண்டு வாரம் ஒன்றிற்கு, சராசரியாக 268 பேர் உயிரிழந்து உள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது. இந்த அறிக்கையின்படி, நடப்பு ஆண்டு பிப்ரவரியில் மட்டுமே, இங்கிலாந்து மருத்துவமனைகளின் அவசரகால பிரிவில் 12 மணிநேரத்திற்கும் கூடுதலாக காத்திருந்தவர்களின் எண்ணிக்கை 45 ஆயிரம் என தெரிய வந்துள்ளது. இது, கடந்த 2023-ம் ஆண்டில் 15 லட்சம் நோயாளிகள் என்ற அளவில் இருந்தது என அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து