Idhayam Matrimony

டபுள் டக்கர் விமர்சனம்

திங்கட்கிழமை, 8 ஏப்ரல் 2024      சினிமா
Double-tucker 2024-04-08

Source: provided

ஆர்ட் ஃபிலிக்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ள இந்தப் படத்தின் மூலம் மீரா மஹதி இயக்குநராக அறிமுகமாகியுள்ளார் தீரஜ். ஸ்மிருதி வெங்கட், கோவை சரளா, எம்.எஸ் பாஸ்கர், காளி வெங்கட், முனீஸ்காந்த், மன்சூர் அலிகான், ஷா ரா, சுனில் ரெட்டி, கருணாகரன் என ஏகப்பட்ட திரைப் பிரலங்கள் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு வித்யா சாகர் இசையமைத்துள்ளார். கதை - ஒருவர் பிறந்ததில் இருந்து இறக்கும் வரை செய்யும் நன்மைகள் மற்றும் தீமைகளை லெஃப்ட் மற்றும் ரைட் என்ற இரண்டு பேர் கணக்கெடுத்து அதனை கடவுளிடத்தில் சமர்பிப்பார்கள்.

அதே நேரத்தில் அவர் இறக்கும்போது அவரை பூமியில் இருந்து கடவுளிடம் அழைத்துச் செல்பவர்களும் இவர்கள்தான். இவர்களின் தவறுதலால் கதாநாயகன் தீரஜ் இறந்து விட அதனால் ஏற்படும் பிரச்னைகள், குழப்பங்களுக்கு எவ்வாறு தீர்வு காணப்பட்டது என்பதுதான் படத்தின் ஒன்லைனாக உள்ளது. லெஃப்ட் மற்றும் ரைட் கதாப்பாத்திரங்களில் இடையிடையில் சினிமா கதாப்பாத்திரங்களாக மாறி தங்களது எண்ணத்தினை வெளிப்படுத்திய காட்சிகளில் எல்லாம் கைத்தட்டல்கள்தான். இந்தக் காட்சிகளுக்கு, சிம்பயாசிஸ் டெக்னாலஜிஸின் அனிமேஷன் பலம் சேர்க்கின்றது.

சினிமா கதாப்பாத்திரங்களைக் கடந்து நன்கு பிரபலமான ஒரு கதாபாத்திரம் அந்த அனிமேஷனில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. லெஃப்ட் மற்றும் ரைட் என்ற அனிமேஷன் கதாப்பாத்திரங்களுக்கு தங்களது குரலினால் உயிர் கொடுத்துள்ளனர் காளி வெங்கட்டும் முனிஷ்காந்தும். திரைக்கதையில் ட்விஸ்ட்கள் இருந்தாலும், அந்த ட்விஸ்ட்டுகள் கதையோட்டத்தில் ரசிகர்கள் மனதில் ஒட்டவில்லை. மொத்தத்தில் மீரா மஹதியின் டபுள் டக்கர் குழந்தைகளை குஷியாக்கும்!

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து