முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேன்டிடேட் செஸ் போட்டி:6-வது சுற்று முடிவில் குகேஷ்,நெபோம்னியாச்சி முதலிடம்

வியாழக்கிழமை, 11 ஏப்ரல் 2024      விளையாட்டு
Gugesh-Neboniyaach

Source: provided

டொராண்டோ:6 சுற்றுகள் முடிவில் இந்தியாவின் குகேஷ், ரஷ்யாவின் இயன் நெபோம்னியாச்சி ஆகியோர் தலா 4 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளனர்.

அமெரிக்காவின்... 

கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியின் 6-ஆவது சுற்றின் முடிவில் இந்தியாவின் குகேஷ், ரஷியாவின் இயன் நெபோம்னியச்சியுடன் மீண்டும் முதலிடத்தை பகிர்ந்துகொண்டுள்ளார். ஏற்கனவே 5-வது சுற்று முடிவிலும் இருவரும் முதலிடத்தை பகிர்ந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. நேற்று அதிகாலை நடைபெற்ற 6வது சுற்றில் இந்திய வீரர் குகேஷ் அமெரிக்காவின் ஹிகரு நகமுராவுடன் டிரா செய்தார். மற்றுமொரு இந்திய வீரர் பிரக்ஞானந்தா நிஜத் அபாசோவவை தோற்கடித்தார்.

8 சுற்றுகள் மீதம்... 

மொத்தம் உள்ள 14 சுற்றுகளில் 6 சுற்றுகள் முடிவடைந்துவிட்டன. இன்னும் 8 சுற்றுகள் மீதமுள்ளன. 6ஆவது சுற்று முடிவு: (ஓபன் பிரிவு) இயன் நெபோம்னியச்சி, குகேஷ் 4 புள்ளிகளுடன் முதல் இடத்தை பகிர்ந்துள்ளனர். கரானா (3), பிரக்ஞானந்தா இருவரும் தலா 3.5 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை பகிர்ந்துள்ளனர். ஹிகரு நகமுரா, விதித் சந்தோஷ் 3 புள்ளிகளுடன் 3ஆம் இடத்தில் உள்ளனர். மகளிர் பிரிவில் இந்திய வீராங்கனைகளான வைஷாலி, கொனேரு முறையே 2.5, 2 புள்ளிகளுடன் 5வது, 7வது இடங்களை பிடித்துள்ளனர். டான் 4.5 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து