முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சனாதனம் வீழ்ந்தால் பாரதம் வீழும்: கவர்னர் ஆர்.என்.ரவி

சனிக்கிழமை, 13 ஏப்ரல் 2024      தமிழகம்
RN-Ravi 2023 04 03

Source: provided

சென்னை : சனாதனம் வீழ்ந்தால் பாரதம் வீழும் என்றும், பாரதம் என்பது சனாதனத்தை அடிப்படையாக கொண்டு செயல்படுகிறது என்றும் கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.

சிருங்கேரி சாரதா பீடாதிபதி பாரதீ தீர்த்த மகா சுவாமிகளின் சன்யாச ஆஸ்ரம பொன்விழாவை முன்னிட்டு, சென்னை அடையாறு அனந்த பத்மநாப சுவாமி கோயில் அருகில் உள்ள கல்யாண மண்டபத்தில், ஏழு நாட்கள் சங்கர விஜயம் திருவிழா நடத்தப்படுகிறது. 

இதில் நேற்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, பங்கேற்று வித்யா பாரதி புரஸ்கார் விருதுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசுகையில், 

 சனாதன தர்மம் எந்த ஒரு ஏற்ற தாழ்வையும் வலியுறுத்தவில்லை. நாம் அனைவரும் ஒன்று என்றே சனாதனம் கூறுகிறது. பாரதம் என்பது சனாதனத்தை அடிப்படையாக கொண்டு செயல்படுகிறது. சனாதனம் வீழ்ந்தால் பாரதம் வீழும் என தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து