முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளாவில் தேர்தலை புறக்கணிக்குமாறு மாவோயிஸ்டுகள் எச்சரிக்கை

புதன்கிழமை, 24 ஏப்ரல் 2024      இந்தியா
Vote 2024-01-05

Source: provided

திருவனந்தபுரம்:கேரள மாநிலத்தில் உள்ள 20 தொகுதிகளுக்கும் வரும் 26ம் தேதி (நாளை) ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு நேற்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைந்தது. இதையொட்டி அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், நேற்று காலை 6 மணி அளவில் வயநாடு தொகுதிக்குட்பட்ட கம்பமலை கிராமத்திற்கு வந்த ஆயுதம் தாங்கிய மாவோயிஸ்டுகள் 4 பேர் பொதுமக்களிடையே தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியதாக கூறப்படுகிறது. மேலும் பொதுமக்களிடம் தங்களது கருத்துக்களை வெகுநேரம் தெரிவித்தப்படி இருந்த மாவோயிஸ்டுகள் பின்பு அங்கிருந்து புறப்பட்டு மக்கிமாலா தேயிலை தோட்ட பகுதிக்குள் நுழைந்து வனப்பகுதிக்குள் சென்றனர்.

இது தொடர்பாக உள்ளூர் இளைஞர் ஒருவர் எடுத்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், அந்த பகுதியில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வீடியோவில் இருந்த காட்சிகளை கொண்டு மிரட்டல் விடுத்த மாவோயிஸ்டுகள் யார் என்பது தெரியவந்துள்ளது.

மாவோயிஸ்டுகள் பகிரங்க மிரட்டல் விடுத்ததன் காரணமாக வயநாடு தொகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவி வருகிறது. வயநாடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆனி ராஜா, பா.ஜ.க. சார்பில் மாநில தலைவர் சுரேந்திரன் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து