முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராணுவத்திற்கு அக்னிவீர் திட்டம் தேவையில்லை : அரியானாவில் ராகுல் பேச்சு

புதன்கிழமை, 22 மே 2024      இந்தியா
Rahul-Gandhi-1 2023-06-01

Source: provided

சண்டிகர் : ராணுவத்திற்கு 'அக்னிவீர்' திட்டம் தேவையில்லை. இது பிரதமர் அலுவலகத்தால் உருவாக்கப்பட்ட திட்டம் என காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறினார்.

அரியானா மாநிலம் மகேந்திரகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் பேசியதாவது: விவசாயிகளின் கடனை நரேந்திர மோடி தள்ளுபடி செய்யவில்லை. அதானி, அம்பானி போன்ற கோடீஸ்வரர்களின் கடனை தள்ளுபடி செய்துள்ளனர். இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்த பின் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யும்.பாரத் ஒற்றுமை நியாய யாத்திரையின் போது, பணவீக்கம், வேலையில்லாத் திண்டாட்டம், விவசாயிகளின் பிரச்னைகள் பற்றி கேட்டறிந்தேன்.

ஆனால் வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம், விவசாயிகளின் பிரச்னைகள் குறித்து ஊடகங்களில் செய்தி வெளியிடுவதில்லை. ராணுவத்திற்கு 'அக்னிவீர்' திட்டம் தேவையில்லை. இது பிரதமர் அலுவலகத்தால் உருவாக்கப்பட்ட திட்டம். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த உடன், இந்த திட்டத்தை குப்பை தொட்டியில் வீசும். இவ்வாறு ராகுல் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து