முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பறவைகள் மோதியதால் லடாக் சென்ற விமானம் டெல்லியில் அவசரமாக தரையிறக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 26 மே 2024      இந்தியா
Air-India

Source: provided

புதுடெல்லி : பறவைகள் மோதியதால்  டெல்லியில் இருந்து லடாக் புறப்பட்டு சென்ற விமானம் அவசர அவசரமாக டெல்லி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. 

டெல்லியில் இருந்து 135 பயணிகளுடன் ஸ்பைஸ் ஜெட் விமானம் லடாக் யூனியன் பிரதேசம் லே நகருக்கு நேற்று காலை 10.30 மணிக்கு புறப்பட்டது. விமானம் புறப்பட்டு 30 நிமிடத்தில் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது அதன் மீது பறவைகள் மோதின.

விமானத்தின் 2-வது எஞ்ஜினில் பறவைகள் மோதியது. இதையடுத்து, பாதுகாப்பு காரணங்களுக்காக விமானம் டெல்லி விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.  

இந்த சம்பவத்தில் பயணிகள் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் இது சாதாரண நடைமுறைதான் என்றும் ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து