முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெலுங்க தேச கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சரின் சொத்து மதிப்பு 5,705 கோடி ரூபாய்

திங்கட்கிழமை, 10 ஜூன் 2024      இந்தியா
Bemmasani-Chandrasekhar 202

Source: provided

புதுடெல்லி : மத்திய அமைச்சரவையில் அதிக சொத்து மதிப்புடைய அமைச்சர் என்ற பெருமையை தெலுங்கு தேசம் கட்சியின் பெம்மசனி சந்திரசேகர் பெற்றுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான 18-ஆவது மத்திய அமைச்சரவை ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றுக் கொண்டது. இதில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தெலுங்கு தேசம் கட்சியின் பெம்மசனி சந்திரசேகர் (வயது 48) இணையமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட 8,390 வேட்பாளர்களில் இவரின் சொத்து மதிப்பே அதிகம். தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திர தரவுகளின்படி, சந்திரசேகரின் சொத்து மதிப்பு ரூ.5,705 கோடியாகும். ஆந்திரத்தின் குண்டூர்மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்ற சந்திரசேகா், வெளிநாடுவாழ் இந்தியா்கள் (என்ஆா்ஐ) பிரிவைச் சோ்ந்த மருத்துவரும் தொழிலதிபருமாவார்.

குண்டூர் மாவட்டம் புரிபாலம் கிராமத்தில் பிறந்த சந்திரசேகர், ஹைதராபாத்தில் மருத்துவ இளநிலை படிப்பும், வெளிநாட்டில் மருத்துவ முதுநிலை படிப்பும் படித்துள்ளார். தொடக்கத்தில் மருத்துவ பேராசிரியராக பணியாற்றிய சந்திரசேகர், தற்போது சொந்தமாக நிறுவனங்களை நடத்தி வருகிறார். இவருக்கு அடுத்து அமைச்சரவையில் அதிக சொத்து மதிப்புடையவர் ஜோதிராதித்ய சிந்தியா. மத்திய கேபினேட் அமைச்சராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுள்ள இவரின் சொத்து மதிப்பு ரூ. 484 கோடியாகும்.

மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட டாப் 10 கோடீஸ்வரர்களில் சந்திரசேகர் மற்றும் சிந்தியா மட்டுமே வெற்றி பெற்று அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ளனர். மேலும், 18-ஆவது மக்களவைத் தோ்தலில் வென்றுள்ள எம்.பி.க்கள் குறித்து செய்யப்பட்ட ஆய்வில் வெற்றி பெற்ற 543 வேட்பாளா்களில் 504 பேர்கோடீஸ்வரா்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது. 32 சதவீதம் எம்பிக்கள் ரூ.1 முதல் 5 கோடி வரையிலும் 19 சதவீதம் பேர்ரூ. 5 முதல் 10 கோடி வரையிலும் 42 சதவீதம் பேர் ரூ. 10 கோடி மற்றும் அதற்கு மேலும் சொத்து வைத்துள்ளனா். சுமார்1 சதவீதத்தினர்மட்டுமே ரூ.20 லட்சத்துக்கும் குறைவான சொத்துக்களைக் கொண்டுள்ளனா்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து