முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமல்படுத்துவதில் மாநிலங்கள் சிக்கல்களை எதிர்கொள்கின்றன: 3 குற்றவியல் சட்டங்களை நிறுத்தி வைக்க வேண்டும் : மத்திய உள்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

செவ்வாய்க்கிழமை, 18 ஜூன் 2024      தமிழகம்
Stelin 2022 02 23

Source: provided

சென்னை : 3 குற்றவியல் சட்டங்களை அமல்படுத்துவதில் மாநிலங்கள் சிக்கல்களை எதிர்கொள்கின்றன என்று தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், 3 குற்றவியல் சட்டங்களையும் நிறுத்தி வைக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளர். 

3 சட்டங்களுக்கு மாற்று...

பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்சா சன்ஹிதா மற்றும் பாரதிய சாக்சய சட்டம் ஆகிய 3 புதிய குற்றவியல் சட்டங்களும் கடந்த ஆண்டு டிசம்பரில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டங்களுக்கு ஜனாதிபதியின் ஒப்புதலும் பெறப்பட்டது. இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் சாட்சிய சட்டங்களுக்கு மாற்றாக இந்த புதிய சட்டங்களை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு இந்த மூன்று சட்டங்களிலும் பல புதுமையான யோசனைகள் உள்ளதாக தெரிவித்துள்ள மத்திய அரசு வரும் ஜூலை 1-ம் தேதி முதல் இந்த சட்டம் அமல்படுத்தப்படும் என்று கூறியது.

அமல்படுத்த எதிர்ப்பு...

இந்த நிலையில், புதிய குற்றவியல் சட்டங்களை தமிழகத்தில் அமல்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:- மத்திய அரசு நிறைவேற்றிய 3 சட்டங்கள் குறித்து கருத்து தெரிவிக்க அவகாசம் தரப்படவில்லை. குற்றவியல் சட்டங்களை அமல்படுத்துவதில் மாநிலங்கள் சிக்கல்களை எதிர்கொள்கின்றன.

பிழை, முரண்பாடுகள்...

3 குற்றவியல் சட்டங்களில் சில அடிப்படை பிழைகள், முரண்பாடுகள் உள்ளன. அனைத்து துறைகளுடனும் ஆலோசித்து அமல்படுத்த போதிய கால அவகாசம் தேவை. சட்டங்கள் அனைத்தும் சமஸ்கிருதத்தில் பெயரிடப்பட்டுள்ளன. சட்டத்தின் பெயர் ஆங்கிலத்தில் இருப்பது அவசியம். சமஸ்கிருதத்தில் சட்டத்தின் பெயர்கள் இருப்பது அரசியல் அமைப்பு 348 ஐ மீறுவது ஆகும். சட்டங்களை நடைமுறைப்படுத்த கல்வி நிறுவனங்களுடன் விவாதம் நடத்தி சட்டப் பாடங்களை மாற்றியமைக்க வேண்டும். என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 weeks 22 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 weeks 22 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து