முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நைஜீரியாவில் பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்ததில் மாணவர்கள் 22 பேர் பலி

சனிக்கிழமை, 13 ஜூலை 2024      உலகம்
Nigeria-School 2024-07-13

Source: provided

அபுஜா : நைஜீரியாவில் பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 22 மாணவர்கள் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். 

வட மத்திய ஆப்ரிக்க நாடான நைஜீரியாவின் ஜோஸ் நகரில் உள்ள ஒரு தனியாருக்கு சொந்தமான ஆரம்ப மற்றும் மேல்நிலைப் பள்ளியில் நேற்று முன்தினம் வகுப்புகள் வழக்கம்போல நடைபெற்று கொண்டிருந்தது. 

அப்போது, பள்ளியின் 2 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் சிக்கி 22 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் 100-க்கும் மேற்பட்டவர்களை இடிப்பாடுகளில் இருந்து உள்ளூர் மக்களும், மீட்புப் படையினரும் இணைந்து மீட்டுள்ளனர்.

கட்டிடம் இடிந்து விழுந்த போது 154 மாணவர்கள் இடிபாடுகளில் சிக்கியதாகவும் அவர்களில் 22 மாணவர்கள் உயிரிழந்து விட்டனர் என்றும், 132 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என்றும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்த மாணவர்கள் அனைவரும் அருகில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, கட்டணம் இல்லாமல் சிகிச்சை அளிக்குமாறு மருத்துவமனைகளுக்கு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது என்று தகவல் ஆணையர் மூசா அஷோம்ஸ் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து