முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3-வது டி-20யில் அபார வெற்றி: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரை வென்றது இந்தியா

சனிக்கிழமை, 13 ஜூலை 2024      விளையாட்டு
INDIA 2024-06-21

Source: provided

ஹராரே : ஜெய்ஸ்வால், சுப்மன் கில் அதிரடியால் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3-வது டி-20யில் அபார வெற்றிப்பெற்றதன் மூலம் இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது.

சுற்றுப்பயணம்...

சுப்மன் கில் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 4-வது போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

கில் - ஜெய்ஸ்வால்... 

அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் அடித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சிக்கந்தர் ராசா 46 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் அதிகபட்சமாக கலீல் அகமது 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனையடுத்து 153 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சுப்மன் கில் - ஜெய்ஸ்வால் ஆகியோர் களமிறங்கினர். இதில் கில் நிதானமாக விளையாட ஜெய்ஸ்வால் ஆரம்பம் முதலே அதிரடியில் வெளுத்து வாங்கினார். 29 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

3-1 என்ற கணக்கில்... 

சுப்மன் கில்லும் தனது பங்குக்கு அரைசதம் அடிக்க இந்தியா வெறும் 15.2 ஓவர்களிலேயே விக்கெட் இழப்பின்றி ரன்கள் அடித்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கில் 58 ரன்களுடனும், ஜெய்ஸ்வால் 93 ரன்களுடனும் குவித்த நிலையில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் இந்தியா 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

தேஷ்பாண்டே அறிமுகம்

இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, ஜிம்பாப்வே முதலில் பேட் செய்தது. இந்திய அணியில் துஷார் தேஷ்பாண்டே அறிமுக வீரராக களமிறங்கினார். நேற்றைய போட்டியில் ஆவேஷ் கான் அணியில் இல்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 12 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 12 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து