Idhayam Matrimony

சத்தீஷ்கரில் நக்சல்கள் நடத்திய தாக்குதலி 2 வீரர்கள் உயிரிழப்பு

வியாழக்கிழமை, 18 ஜூலை 2024      இந்தியா
Kashmir

ராய்ப்பூர், சத்தீஷ்கரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 2 பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்தனர். 4 பேர் படுகாயமடைந்தனர் 

சத்தீஷ்கர் மாநிலம் பிஜாப்பூர், தண்டேவாடா மற்றும் சுக்மா ஆகிய எல்லை பகுதிகளில் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பாதுகாப்புப்படை வீரர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தனர். 

இந்நிலையில், நேற்று முன்தினம் தேடுதல் பணி முடிந்து திரும்பிக் கொண்டிருக்கும் போது பிஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள டர்ரெம் பகுதியில் நக்சலைட்டுகள் நடத்திய திடீர் வெடிகுண்டு தாக்குதலில் ராய்ப்பூரை சேர்ந்த பரத் சாஹு மற்றும் நாராயண்பூரை சேர்ந்த சத்யர் சிங் காங்கே ஆகிய 2 வீரர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் நான்கு வீரர்கள் படுகாயமடைந்தனர்.

இதில் படுகாயமடைந்த வீரர்கள் பிஜாப்பூர் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அவர்கள் மேல்சிகிச்சைக்காக ராய்ப்பூரில் உள்ள மருத்துவமனைக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். 

இதையடுத்து சம்பவம் நடந்த பகுதிக்கு கூடுதலாக வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள மாநில முதல்வர்  விஷ்ணு தியோ சாய், 

வீரர்களின் தியாகம் வீண் போகாது என்றும், நக்சலைட்டுகளை ஒழிக்கும் வரை போராட்டம் தொடரும் என்று தெரிவித்துள்ளார்.  சத்தீஷ்கரில் இந்த ஆண்டு இதுவரை 139 நக்சலைட்டுகள் பாதுகாப்புப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து