முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய பொருளாதாரம் வலுவான நிலையில் உள்ளது : தலைமை பொருளாதார ஆலோசகர் தகவல்

திங்கட்கிழமை, 22 ஜூலை 2024      இந்தியா
INDIA 2024-04-17

Source: provided

புதுடெல்லி : இந்திய குடும்பங்கள் பணக்கஷ்டத்தில் இல்லை என்று தெரிவித்துள்ள இந்திய தலைமை பொருளாதார ஆலோசகர் ஆனந்த நாகேஸ்வரன் , இந்திய பொருளாதாரம் வலுவான நிலையில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-24ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை மக்களவையில் தாக்கல் செய்தார். 476 பக்கங்கள் கொண்ட ஆய்வறிக்கையில், 'நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் இருக்கிறது.தொழில் துவங்குவதற்கான நடைமுறைகள் எளிதாக்கப்படுகின்றன. நாட்டில் வேலைவாய்ப்புகள் பெருகி வருகின்றன' உள்ளிட்ட பல அம்சங்கள் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்த நிலையில், தலைமைப் பொருளாதார ஆலோசகர் ஆனந்த நாகேஸ்வரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- இந்திய பொருளாதாரம் வலுவான நிலையில் உள்ளது. அன்னிய நேரடி முதலீடு, நிறுவன விரிவாக்க நிதி அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அன்னிய நேரடி முதலீட்டை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. நடப்பு நிதியாண்டில் வேளாண்மைத்துறை சிறப்பான வளர்ச்சி அடையும். தொழில் மற்றும் உற்பத்தித் துறை கூடுதல் வளர்ச்சியை எட்டும்.

சர்வதேச வர்த்தகத்தில் இந்தியாவின் பங்கு அதிகரித்திருக்கிறது. இந்திய குடும்பங்கள் பணக்கஷ்டத்தில் இல்லை. பணத்தை முதலீடு செய்கின்றனர். தனியார் முதலீடுகள் 2021-ம் ஆண்டுக்கு பிறகு உயர்ந்து வருகிறது. பருவமழை பெய்து வருவதால், வேளாண் உற்பத்தி பாதிக்கப்படும் சூழல் உள்ளது. விலைவாசி உயர்வை குறிக்கும் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து