முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆட்சியை காப்பதற்கான அறிவிப்புகள்: மத்திய பட்ஜெட் குறித்து இண்டியா கூட்டணி தலைவர்கள் விமர்சனம்

செவ்வாய்க்கிழமை, 23 ஜூலை 2024      இந்தியா
Jairam-Ramesh 2023 07-16

Source: provided

புதுடெல்லி : மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை நேற்று மக்களவையில் தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து, இது ஆட்சியைக் காப்பாற்றுவதற்கான பட்ஜெட் என இண்டியா கூட்டணித் தலைவர்கள் கடுமையாக சாடியுள்ளனர்.

மத்திய பட்ஜெட் குறித்து காங்கிரஸ் கட்சியின் ஊடக பிரிவு செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், 

பிரதமரோ, அவரது கட்சியினரோ அவர்களுடைய தேர்தல் அறிக்கையில் வேலைவாய்ப்பின்மையை பற்றி குறிப்பிடாத நிலையில் இறுதியாக வேலைவாய்ப்பின்மை என்பது தேசிய நெருக்கடி என்பதை மத்திய அரசு மறைமுகமாக ஏற்றுக் கொண்டதாக தெரிகிறது என்று தெரிவித்துள்ளார். 

பட்ஜெட் குறித்த தொடர்ச்சியான பதிவுகளில், இது மிகவும் தாமதமானது, மிகவும் குறைவாகவே உள்ளது. பட்ஜெட் உரையில் செயல்களை விட தங்களை வெளிக்காட்டிக் கொள்வதிலேயே அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் எம்.பி.சசி தரூர் கூறுகையில், 

பட்ஜெட்டில் பல விஷயங்கள் விடுபட்டுள்ளன. தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. மக்கள் தொகையில் 40 சதவீதம் உள்ள வருமானத்தில் பின்தங்கியுள்ளவர்களின் வருமானத்தை உயர்த்துவது தொடர்பான நடவடிக்கைகள் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. நாட்டில் நிலவும் சமத்துவமின்மைக்கு தீர்வு காண்பது பற்றி குறைவாகவே குறிப்பிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறுகையில், அவர்கள்(பா.ஜ.க.) அரசைக் காப்பாற்ற விரும்புகிறார்கள். ஆந்திராவுக்கும் பீகாருக்கும் சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பது நல்ல விஷயம். ஆனால், பிரதமர்களை வழங்கும் உத்தரப் பிரதேசத்தின் விவசாயிகளுக்கு பெரிய அறிவிப்புகள் ஏதாவது உள்ளதா? விவசாயிகளின் விளைபொருள்கள் மற்றும் வருமானங்களுக்கான திட்டங்கள் ஏதாவது பட்ஜெட்டில் உள்ளதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி. கல்யாண் பானர்ஜி கூறுகையில், ஆட்சியைக் காப்பாற்றுவதற்கான பட்ஜெட் இது என்று சாடியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 12 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 12 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து