முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வயநாட்டில் உயிரிழப்பு 350-ஐ தாண்டியது: இறுதிக்கட்டத்தை எட்டிய நிலச்சரிவு மீட்புப்பணிகள்

சனிக்கிழமை, 3 ஆகஸ்ட் 2024      இந்தியா
Kerala-2024-08-03

Source: provided

திருவனந்தபுரம் : கேரளா, வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 350-ஐ தாண்டியுள்ளதாக தெரிவித்த அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் மீட்புப்பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவித்தார். மேலும்,  மாயமானவர்களை ரேடார் ட்ரோன் உள்ளிட்ட நவீன 

கருவிகளுடன் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் முதல்வர் பினராயி விஜயன் பேசியதாவது, வயநாட்டு மக்களைப் புரட்டிப்போட்ட நிலச்சரிவு தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. நிலச்சரிவில் சிக்கிய மேலும் 206 பேரை தீவிரமாகத் தேடி வருகிறார்கள். சாலியாற்றில் இருந்து மீட்கப்பட்ட சடலங்கள் மற்றும் உடலின் பாகங்களை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இதுவரை 215 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன, அதில் 87 பெண்கள், 98 ஆண்கள், 30 குழந்தைகள் ஆவார். மீட்கப்பட்ட 148 உடல்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மேலும் 206 பேர் காணாமல் போயுள்ளனர். அடையாளம் காணப்படாத 67 பேரின் உடல்கள் பஞ்சாயத்துகள் இறுதிச் சடங்குகளைச் செய்யும் என்றும் அவர் கூறினார். தீயணைப்புப் படை, என்டிஆர்பஃப், வனத்துறை,காவல்துறை, இந்திய ராணுவம் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த தன்னார்வத் தொண்டர்கள் என 1,419 பணியாளர்கள் உள்ளடக்கிய முகமைகள் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கே-9 குழுக்கள் மற்றும் தமிழ்நாடு மருத்துவக் குழுவும் பங்கேற்றுள்ளது. ரேடார் மற்றும் ட்ரோன் அடிப்படையிலான மேம்பட்ட கருவிகளும் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் புனரமைப்பு பணிகள் விரைவில் தொடங்கும். இப்பகுதியில் அழிந்த பள்ளிகளை கல்வி அமைச்சர் பார்வையிட்டு, மாணவர்களின் கல்விக்கு இடையூறு ஏற்படாமல் பார்த்துக் கொள்வார் என்றார்.

10,042 பேர் நிவாரண முகாம்களில் தங்கி உள்ளனர். பேரிடர் குறித்து முன்னரே எச்சரிக்கும் அமைப்புகளை மீண்டும் ஆய்வு செய்வதுடன், பருவநிலைக்கு ஏற்ப மாற்றம் செய்ய வேண்டும். சூரமலையில் மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் சிறப்பு டவுன்ஷிப் அமைக்கப்படும். அங்கு, 100 வீடுகள் கட்டி தருவதாக எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கூறியுள்ளார். வீடுகளை இழந்தவர்களுக்காக 100 வீடுகள் கட்டித் தருவதாக கர்நாடக முதல்வரும் தெரிவித்து உள்ளார். பேரிடர் மீட்பு நிவாரண பணிக்கு யுபிஐ ஐடி மற்றும் நெட் பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே கேரள மாநிலம் வயநாடு மாவடட்த்தில் முண்டக்கை மற்றும் சூரல்மலை பகுதிகளில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக, உடனடியாக ரூ.4 கோடி ஒதுக்கப்படுவதாக கேரள அரசு அறிவித்துள்ளது. விரைவாக, மாநில பேரிடர் மேலாண்மை நிதி, வயநாடு மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்படும் என்றும், இந்த தொகை மக்களின் நிவாரணப் பணிகளுக்கு மட்டும் செலவிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று செய்தியாளர் சந்திப்பின்போது கேரள முதல்வர் பினராயி விஜயன் இந்த தகவலை வெளியிட்டார். மேலும், வயநாடுக்கு உதவுங்கள் என்ற சிறப்புப் பிரிவு ஒன்று உருவாக்கப்படும் என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணப் பணிகளை இந்த அமைப்பு ஒருங்கிணைக்கும் என்றும் கூறினார். இந்த உதவி மையத்தைத் தொடர்புகொண்டு, வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ நினைக்கும் மக்கள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ, 9188940013, 9188940014, 9188940015 என்ற தொலைபேசி எண்கள் மூலமாகவோ தொடர்பு கொண்டு தகவல்களைப் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து