முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீர் கவர்னர் மன்னர் போல் செயல்படுகிறார்: பிரசாரத்தில் ராகுல்காந்தி குற்றச்சாட்டு

புதன்கிழமை, 4 செப்டம்பர் 2024      இந்தியா
Rahul-Gandhi-2023-04-13

ஸ்ரீநகர்,  'ஜம்மு காஷ்மீர் கவர்னர் தன்னை ஒரு மன்னர் போல் நினைத்து செயல்படுகிறார்,' என காங்கிரஸ் எம்.பி.,யும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் குற்றம் சாட்டியுள்ளார்.

ஜம்மு - காஷ்மீரில், மொத்தமுள்ள, 90 சட்டசபை தொகுதிகளுக்கு வரும் 18, 25 மற்றும் அக்., 1ல் மூன்று கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. அக்., 8ல் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின் நடக்கும் முதல் சட்டசபை தேர்தல் என்பதால் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சியுடன் கூட்டணி வைத்து, காங்., போட்டியிடுகிறது.

இந்நிலையில், தேர்தலுக்கான காங்., பிரசாரத்தை, அக்கட்சி தலைவரும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் நேற்று துவக்கினார். ராம்பனில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் ராகுல் பேசியதாவது: மாநிலங்களின் அதிகாரத்தை பா.ஜ., குறைக்கிறது. மாநிலங்களை யூனியன் பிரதேசங்களாக மாற்ற பா.ஜ., திட்டமிட்டு வருகிறது. பத்தாண்டுகளுக்கு, பிறகு ஜம்மு காஷ்மீர் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பதை காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி உறுதி செய்யும். இது மிகவும் அழகான இடம், அடுத்த கூட்டத்திற்கு செல்ல எனக்கு மனமில்லை. பா.ஜ., ஆர்.எஸ்.எஸ் ., வெறுப்பு, வன்முறை மற்றும் பயத்தை பரப்புவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தான், கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 4,000 கிலோமீட்டர் வரை பாதயாத்திரை நடத்தினோம். இன்று காஷ்மீரில் ஒரு ராஜா இருக்கிறார்.  மாநில அந்தஸ்தை மீட்டெடுக்க வேண்டும். ஜம்மு காஷ்மீர் கவர்னர் தன்னை ஒரு மன்னர் போல் நினைத்து செயல்படுகிறார். இவ்வாறு ராகுல் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து