முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

GOAT - திரை விமர்சனம்

ஞாயிற்றுக்கிழமை, 8 செப்டம்பர் 2024      சினிமா
Goat-Review 2024-09-08

Source: provided

இளையதளபதி விஜய், இயக்குர் வெங்கட் பிரபு ஏஜிஎஸ் கூட்டணியில் விஜய் மற்றும் விஜயகாந்த் கேமியோ என பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி சமீபத்தில் வெளியுள்ள படம் தி கிரேட்டஸ்ட் ஒப் ஆல் டைம் GOAT விஜய், பிரஷாந்த், பிரபு தேவா அஜ்மல் ஆகிய நால்வரும் காவல்துறையின் ஒரு பிரிவான சீக்ரெட் ஏஜென்டுகளாக வேலை செய்து வருகிறார்கள்.

இவர்களுக்கு தலைமை அதிகாரியாக ஜெயராம் இருக்கிறார்.  இவர்கள் இணைந்து செய்த மிஷன் ஒன்றில் மோகன் குடும்பம் பாதிக்கப்பட்டு, அதில் தனது குடும்பத்தை அவர் இழக்கிறார். தாய்லாந்துக்கு தனது வேலை நிமித்தமாக செல்லும் விஜய் தனது மனைவி மற்றும் மகனையும் அழைத்து செல்ல, அங்கு பிரச்சனை ஏற்படுகிறது. இதில் விஜய்யின் மகன் ஜீவன் இறந்து விடுகிறான். பின் இந்தியா திரும்பும் விஜய்க்கு என்னென்ன பிரச்சனை எல்லாம் வந்தது? இதனை விஜய் எப்படி சமாளிக்கிறார் என்பதே படத்தின் மீதி கதை.  அப்பா மகன் கதாபாத்திரங்களில் விஜய் நடித்து அசத்தியுள்ளார்.

குறிப்பாக மகன் கதாபாத்திரத்தில் நடிப்பில் மிரட்டியுள்ளார்.  பிரஷாந்த், பிரபு தேவா, மோகன், சினேகா, அஜ்மல், லைலா, வைபவ், ஜெயராம், பிரேம்ஜி என எல்லோரும் சிறப்பாக நடித்துள்ளனர். சிவகார்த்திகேயன், திரிஷா ஆகியோரின் கேமியோ கைதட்டல்களை அள்ளுகிறது. குறிப்பாக, கேப்டன் விஜயகாந்தின் இன்ட்ரோ அழகு. டீ ஏஜிங் மற்றும் AI தொழில்நுட்பங்கள் சில இடங்களில் பிழை என்றாலும் நிச்சயம் பாராட்டுக்குறியது.

படத்தின் முதல் பாதி சற்று தொய்வாக இருந்தாலும், இரண்டாம் பாதி விறுவிறுவென செல்கிறது. குறிப்பாக கடைசி 40 நிமிடங்களிள் திரையரங்கை தெறிக்கவிட்டுள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு. ஹீரோவாக மட்டுமின்றி முரட்டுத்தனமான வில்லனாகவும் கலக்கியுள்ளார் தளபதி. யுவன் ஷங்கர் ராஜா பின்னணி இசையிலும் பாடல்களிலும் வெளுத்து வாங்கி இருக்கிறார். மொத்தத்தில் கோட் படத்தை ஒரு முறை பார்த்து ரசிக்கலாம்...

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து