முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை மாநகராட்சியின் முதல் பெண் தபேதார் மாதவி இடமாற்றம்? - மேயர் அலுவலகம் விளக்கம்

புதன்கிழமை, 25 செப்டம்பர் 2024      தமிழகம்
Pirya 2024-09-25

Source: provided

சென்னை : தபேதார் மாதவியின் இடமாற்றத்துக்கும், லிப்ஸ்டிக் விவகாரத்துக்கும் சம்பந்தமில்லை என்று மேயர் அலுவலகம் விளக்கமளித்துள்ளது.

சென்னை மேயர் பிரியாவின் தபேதாராக மாதவி (50 வயது) என்பவர் பணியாற்றி வந்தார். இவர் சென்னை மாநகராட்சியின் முதல் பெண் தபேதார் ஆவார். சென்னை மாநகராட்சி கூட்டம் உள்பட முக்கிய நிகழ்ச்சிகளில் மேயர் பிரியா பங்கேற்கும்போது அவருடன் தபேதார் மாதவி செல்வார். 

மாதவி உதட்டில் கலர் கலராக 'லிப்ஸ்டிக்' பயன்படுத்தும் பழக்கம் கொண்டவர். 'லிப்ஸ்டிக்' பயன்படுத்தக்கூடாது என்று அவருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும் அவர் தொடர்ந்து 'லிப்ஸ்டிக்' பூசி வந்துள்ளார். கடந்த மாதம் மேயர் பிரியாவின் நிகழ்ச்சியில் பங்கேற்ற தபேதார் மாதவி 'லிப்ஸ்டிக்' பயன்படுத்தி உள்ளார். இதனை மேயர் பிரியாவின் உதவியாளர் கண்டித்தார்.

இந்த நிலையில் தபேதார் மாதவி திடீரென்று மணலி மண்டலத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பணியில் அலட்சியம், உரிய நேரத்தில் பணிக்கு வராதது, அலுவலக உத்தரவை பின்பற்றாதது ஆகிய காரணங்களினால் அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக அவருக்கு கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி மெமோ அனுப்பப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக சென்னை மேயர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, தபேதார் மாதவியின் இடமாற்றத்துக்கும், லிப்ஸ்டிக் விவகாரத்துக்கும் சம்பந்தமில்லை என்றும் அவர் பணிக்கு சரிவர வராத காரணத்தால்தான் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து