முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி இஸ்கான் கோவிலுக்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல்

திங்கட்கிழமை, 28 அக்டோபர் 2024      ஆன்மிகம்
Tirupati-ISKCON 2024-10-28

Source: provided

திருமலை : திருப்பதியில் பிரபலமான இஸ்கான் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில தினங்களாக விமானங்கள், விமான நிலையங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பிரபல ஹோட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகிறது. இந்த மிரட்டலை தொடர்ந்து நடத்தப்படும் சோதனையில், அது வெறும் புரளி என தெரிய வருகிறது. இதனால், வெடிகுண்டு மிரட்டல்கள் குறித்த விவகாரத்தில் சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு சில கண்டிப்புகளை விதித்துள்ளது.

இந்த நிலையில், திருப்பதியில் பிரபலமான இஸ்கான் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது பக்தர்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. கோவிலின் இ-மெயில் முகவரிக்கு வந்த மெசேஜில், பாகிஸ்தானைச் சேர்ந்த ஐ.எஸ்.ஐ., தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் கோவிலை தகர்ப்பார்கள் என்று மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இதனால், பதறிப்போன கோவில் நிர்வாகிகள், இது தொடர்பாக போலீசாருக்கும், வெடிகுண்டு நிபுணர்களுக்கும் தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில், விரைந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய்களின் உதவியுடன் கோவிலின் மூலைமுடுக்குகளிலும் தீவிர சோதனை நடத்தினர். எந்த வெடிபொருட்களும் கைப்பற்றப்படாத நிலையிலும், கோவிலில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், வெடிகுண்டு மிரட்டல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே, கடந்த 26ம் தேதி திருப்பதியில் உள்ள பிரபலமான 2 ஓட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு, பின்னர் நடந்த சோதனையில் வதந்தி என தெரிய வந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து