முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நமது படைகளை வலுப்படுத்த அனைத்தையும் செய்வோம்: பிரதமர் நரேந்திரமோடி பதிவு

வியாழக்கிழமை, 7 நவம்பர் 2024      இந்தியா
Modi-2024-11-07

புதுடெல்லி, ஆயுதப் படைகளை வலுப்படுத்தவும், நமக்குச் சேவை செய்பவர்களின் நலனுக்காகவும் நாம் எப்போதும் முடிந்த அனைத்தையும் செய்வோம் என்று தெரிவித்துள்ள பிரதமர் மோடி படைவீரர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்களின் துணிச்சலுக்கும் தியாகத்துக்கும் இது ஒரு மரியாதை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது.,  இதே நாளில்தான் (நேற்று) ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் (OneRankOnePension) திட்டம் அமல்படுத்தப்பட்டது. நமது தேசத்தைப் பாதுகாப்பதற்காகத் தங்கள் இன்னுயிரை அர்ப்பணிக்கும் நமது படைவீரர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்களின் துணிச்சலுக்கும் தியாகத்துக்கும் இது ஒரு மரியாதை. ஒரே பதவி ஒரே ஓய்வூதியத்தை நடைமுறைப்படுத்துவதற்கான முடிவு என்பது, நீண்டகால கோரிக்கையை நிவர்த்தி செய்வதற்கும், நமது மாவீரர்களுக்கு நமது தேசத்தின் நன்றியை மீண்டும் உறுதிப்படுத்துவதற்குமான ஒரு குறிப்பிடத்தக்க படியாகும்.

கடந்த 10 ஆண்டுகளில் லட்சக்கணக்கான ஓய்வூதியதாரர்கள் மற்றும் ஓய்வூதியதாரர் குடும்பங்கள் இந்த முக்கிய முயற்சியால் பயனடைந்துள்ளனர் என்பது உங்கள் அனைவரையும் மகிழ்ச்சியடைய செய்யும். எண்களுக்கு அப்பால் ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் என்பது நமது ஆயுதப்படைகளின் நல்வாழ்வுக்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. நமது ஆயுதப் படைகளை வலுப்படுத்தவும், நமக்குச் சேவை செய்பவர்களின் நலனுக்காகவும் நாம் எப்போதும் முடிந்த அனைத்தையும் செய்வோம். இவ்வாறு அதில் பிரதம்ர் மோடி பதிவிட்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து