முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்செந்தூர் கோவில் யானை தெய்வானைக்கு சிறப்பு பூஜை தங்குமிடத்தை விட்டு வெளியே வந்தது

வியாழக்கிழமை, 28 நவம்பர் 2024      ஆன்மிகம்
Tiruchendur-Deivanai-2024-1

திருச்செந்தூர், திருச்செந்தூரில் கோவில் யானை தாக்கி பாகன் உள்ளிட்ட 2 பேர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று காலை திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. அதன் பின்னர் புனிதநீர் தெளிக்கப்பட்டு யானை தெய்வானை தங்குமிடத்தை விட்டு வெளியே வந்தது.

கடந்த 18-ம்தேதி திருச்செந்தூர் கோவில் யானை தெய்வானை  தாக்கியதில் பாகன் உதயகுமார் (46), அவரது உறவினர் சிசுபாலன் (59) ஆகியோர் உயிரிழந்தனர். மருத்துவர்களின் ஆலோசனையின்படி பாகன்கள் யானையை கண்காணித்தும், உணவளித்தும் வந்தனர். 

மேலும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கடந்த 24-ம்தேதி திருச்செந்தூர் சென்று கோவில் யானையை பார்த்து விட்டு  முதல்வர் சார்பில் பாகன் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதோடு, இருவரது குடும்பத்திற்கும் ரூ.15 லட்சம் நிவாரண உதவி வழங்கினார்.

இச்சம்பவத்திற்காக யானைக்கு பரிகார பூஜையாக சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆனந்த விலாச மண்டபத்தில் வைத்து நேற்று காலை சிறப்பு யாக பூஜைகள் நடந்தது. அதனைத் தொடர்ந்து கும்பத்தில் வைக்கப்பட்ட புனித நீர் யானை தெய்வானைக்கும், அதன் தங்குமிடத்திலும் தெளிக்கப்பட்டது. 

இதற்காக 10 நாட்களுக்குப் பிறகு முதல் முறையாக யானை தெய்வானையை தங்கும் இடத்திலிருந்து பாகன்கள் செந்தில்குமார், ராதாகிருஷ்ணன் ஆகியோர் குளிப்பாட்டி, நவதானிய உணவுகள் வழங்கி வெளியே காற்றோட்டமான இடத்தில் கட்டியுள்ளனர். மேலும் யானைக்கு பச்சை நாற்று உணவாக வழங்கப்பட்டு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து