முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊட்டி தேவாலா மலர்கள் பூங்கா மேம்பாட்டுக்கு ரூ.70.23 கோடி பிரதமர் மோடிக்கு எல்.முருகன் நன்றி

வெள்ளிக்கிழமை, 29 நவம்பர் 2024      தமிழகம்
Murugan 2023 04 02

Source: provided

 

சென்னை: தமிழகத்தின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலாத் தலமான ஊட்டி தேவாலா மலர்கள் பூங்கா மேம்பாட்டுக்கு ரூ. 70.23 கோடி நிதி ஒதுக்கியுள்ள பிரதமர் மோடிக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நன்றி தெரிவித்துள்ளார்.

இது குறித்து மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்  நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 

பிரதமர் மோடி தலைமையிலான நமது அரசாங்கம், சீரிய தொலைநோக்கு பார்வை கொண்ட, ரூ. 3,295 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்திய சுற்றுலாத்துறையை சர்வதேச தரத்தில் தரம் உயர்த்துவதன் மூலம், நமது பாரத தேசத்தின் பழமை வாய்ந்த கலாச்சார செரிவினை, உலகம் முழுமைக்கும் கொண்டு செல்கின்ற வகையில், 23 மாநிலங்களை உள்ளடக்கிய இந்த வளர்ச்சித் திட்டத்தில், தமிழகமும் இடம்பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

மாமல்லபுரத்தில் அமைந்துள்ள நந்தவனம் பாரம்பரிய பூங்கா பகுதியின் மேம்பாட்டிற்கு 99.67 கோடி ரூபாய் மற்றும் தமிழகத்தின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலாத் தலமான ஊட்டி தேவாலா மலர்கள் பூங்கா பகுதியின் மேம்பாட்டிற்கு 70.23 கோடி ரூபாய் என்று, தமிழகத்திற்கு ஏறத்தாழ 170 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியதற்கு, பிரதமர் மோடிக்கு தமிழக மக்கள் அனைவரது சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அந்த பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.  

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து