முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்திரேலியாவை வீழ்த்த இந்திய அணிக்கு புஜாரா யோசனை

வெள்ளிக்கிழமை, 29 நவம்பர் 2024      விளையாட்டு
Pujara 2023-09-19

Source: provided

மும்பை : ஆஸ்திரேலியாவை வீழ்த்த இந்திய அணிக்கு புஜாரா யோசனை தெரிவித்துள்ளார்.

அபார வெற்றி... 

இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதும் பார்டர் - கவாஸ்கர் தொடரின் 2ஆவது டெஸ்ட் போட்டி இரவு பகல் ஆட்டமாக பிங்க் பந்தில் நடைபெறவிருக்கிறது. முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. அடிலெய்டில் ஆஸ்திரேலிய அணி சிறப்பாக விளையாடிய வரலாறு இருக்கிறது. அதனால் அடுத்த போட்டி முக்கியமானதாக இருக்கும். இதுவரை 12 பிங்க் பந்து கிரிக்கெட்டில் 11 போட்டிகளில் ( 2024இல் மே.இ.தீ. இடம் 8 ரன்களில் தோல்வி) ஆஸி. வென்றுள்ளது. இந்திய அணி 5 போட்டிகளில் 4இல் வெற்றி (ஆஸி.யிடம் 2020இல் தோல்வி) பெற்றுள்ளது.

சிறிது நேரம் தேவை...

இந்த நிலையில் இந்தியாவின் அனுபவம் மிகுந்த டெஸ்ட் கிரிக்கெட்டர் புஜாரா கூறியதாவது: பிங்க் பந்தினை ஆடுவதற்கு உங்களுக்கு இன்னும் சிறிது நேரம் தேவை. நீங்கள் உங்களது ஃபுட் ஒர்க்கை (கால் நகர்த்தல்களை) விரைவாக்க வேண்டும். பிங்க் பந்து ஆடுகளத்தில் விழுந்து சறுக்கிக்கொண்டு வரும். அதனால், பேட்டர்களுக்கு சிவப்பு பந்துகளைவிடவும் நேரம் குறைவாக இருக்கும். அதனால் கால் நகர்த்தல்களை சரிப்படுத்திக்கொள்ளுதல் வேண்டும்.

தோற்றதில்லை... 

ஆஸ்திரேலியா பிங்க் பந்தில் சிறப்பாக விளையாடியுள்ளதால் இந்தப் போட்டி சவாலானதாக இருக்கும். பிங்க் பந்தில் ஒரேயொரு போட்டியில்கூட ஆஸி. தோற்றதில்லை. அதனால் அடுத்த போட்டியில் ஆஸி. மீண்டு வருமென நினைக்கிறேன். முதல் டெஸ்ட் சென்ற விதத்தினை பார்க்கும்போது நாம் சிறப்பாக விளையாடியுள்ளோம். அதனால் இந்தப் போட்டி சம அளவில் போட்டியாகவும் மிக சுவாரசியமாகவும் இருக்கும் என்றார்.

மைதானத்தில்...

இரண்டாவது டெஸ்ட் அடிலெய்டில் டிச.6 முதல் டிச.10ஆம் தேதிவரை இரவு பகல் ஆட்டமாக நடைபெறும். 3-வது டெஸ்ட் பிரிஸ்பேனில் டிச.14 - டிச.18வரை நடைபெறும். 4-வது டெஸ்ட் பாக்ஸிங் டே கிரிக்கெட் டிச.26 - டிச.30 வரை மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறும். 5-வது, கடைசி டெஸ்ட் போட்டி சிட்னி கிரிக்கெட் திடலில் ஜன.3-ஜன.7-ம் தேதி வரை நடைபெறுவதும் குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து