முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி கோவில் அருகே அரசியல் பேச்சுக்கு தடை : மீறினால் சட்ட நடவடிக்கை என எச்சரிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 1 டிசம்பர் 2024      ஆன்மிகம்
Tirupati-2023-05-01

Source: provided

திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அரசியல் பேச்சுகளுக்கு தடை விதிக்க முடிவு செய்துள்ள தேவஸ்தானம், விதிகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

திருப்பதி ஏழுமலையான் கோவில் உள்ள திருமலையின் புனிதத்தையும், ஆன்மிக சூழலை காக்கும் வகையில் திருமலையில் அரசியல் மற்றும் வெறுப்பு பேச்சுக்களை தடை செய்ய தேவஸ்தான அறங்காலர் குழு முடிவு செய்துள்ளது. 

எப்போதும் கோவிந்தா, கோவிந்தா என பக்தி முழக்கம் ஒலிக்கும், கலியுக வைகுண்டமாக போற்றப்படும் புனிதமான ஏழுமலையான் கோவில் அமைந்துள்ள திருமலையில், சுவாமி தரிசனத்திற்காக வரும் அரசியல் தலைவர்கள் சிலர், தரிசனம் முடிந்ததும், கோவிலுக்கு வெளியே செய்தியாளர்களை சந்திக்கின்றனர்.

அப்போது அரசியல் பேச்சுக்களையும், விமர்சனங்களையும் செய்கின்றனர். இது போன்ற அரசியல் பேச்சுகள், விமர்சனங்கள் திருமலையில் ஆன்மிகச்சூழலை சீர்குலைத்து வருகிறது. 

இந்நிலையில் திருமலையில் அரசியல் பேச்சுகளுக்கு தடை விதிக்க தேவஸ்தான அறங்காவலர் குழுவில் முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.  

எனவே, இதனை மனதில் வைத்து, திருமலைக்கு வந்து சுவாமி தரிசனம் செய்பவர்கள், திருமலையின் ஆன்மிகச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் அரசியல் உள்ளிட்ட பல்வேறு விமர்சன பேச்சுக்களை பேசாமல் தேவஸ்தானத்திற்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. அந்த விதிகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து