முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு:ஷில்பா ஷெட்டி கணவருக்கு சம்மன்

திங்கட்கிழமை, 2 டிசம்பர் 2024      இந்தியா
Rajkundra 2024-12-02

Source: provided

 

மும்பை: ஆபாசப் படங்களை தயாரித்து விநியோகித்த புகார் தொடர்பாக சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராக ஷில்பா ஷெட்டியின் கணவருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

ஆபாசப் படங்களை தயாரித்து விநியோகித்த புகாரில் ராஜ் குந்த்ரா, கடந்த 2021-ஆம் ஆண்டில் மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஜாமினில் ராஜ் குந்த்ரா விடுவிக்கப்பட்டார். தனக்கு எதிரான குற்றசாட்டுக்களை ராஜ்குந்த்ரா மறுத்து வருகிறார். அதேவேளையில், 98 கோடி ரூபாய் வரை மோசடி நடந்ததாகவும், பிட்காயின் மோசடிகள் நடந்ததாகவும் அமலாக்கத்துறை தரப்பில் ராஜ்குந்த்ரா மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

இந்த வழக்கு தொடர்பாக கடந்த 29-ந் தேதி அமலாக்கத்துறை மும்பையில் உள்ள ராஜ்குந்த்ராவுக்கு சொந்தமான இடங்கள், உத்தரபிரதேசத்தை சேர்ந்த தொழில் அதிபர் சம்மந்தப்பட்ட இடங்கள் என 15 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். இந்தநிலையில் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராக ராஜ்குந்த்ரா மற்றும் உத்தரபிரதேச தொழில் அதிபருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து