முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தான் - ரஷ்யா சரக்கு ரயில்: வரும் மார்ச்சில் சோதனை ஓட்டம்

சனிக்கிழமை, 7 டிசம்பர் 2024      உலகம்
Rail 2024-12-07

Source: provided

இஸ்லாமாபாத்: 2025, மார்ச் மாத தொடக்கத்தில், ரஷ்யாவிலிருந்து பாகிஸ்தானுக்கு பொருட்களை கொண்டு செல்லும் சரக்கு ரயில் சோதனை ஓட்டம் தொடங்கும்  என்று பாகிஸ்தான் எரிசக்தி அமைச்சர் அவாய்ஸ் அகமது கான் தெரிவித்துள்ளார். 

பாகிஸ்தான் மற்றும் ரஷ்ய அரசுகளுக்கு இடையே சுகாதாரம், வர்த்தகம், தொழில்துறை ஒத்துழைப்பு, கல்வி உள்ளிட்ட துறைகளை உள்ளடக்கிய எட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கடந்த 5-ம் தேதி கையெழுத்தானது. 

இது குறித்து ரஷ்யாவிற்கான பாகிஸ்தான் தூதர் முகமது காலித் ஜமாலி அரசு நடத்தும் ரஷ்ய தொலைக்காட்சியான ரஷ்யா டுடேவுக்கு பேட்டியளிக்கையில்,

 ரஷ்யா மற்றும் மத்திய ஆசியாவை இணைக்கும் 7,200 கிமீ நீளமுள்ள ரயில் பாதை திட்டத்தில் பாகிஸ்தான் சேரத் தயாராக இருக்கிறது என்றார். பாகிஸ்தான் எரிசக்தி அமைச்சர் அவாய்ஸ் அகமது கான் லெகாரி ரஷ்யா டுடேவிடம் கூறுகையில்,

அடுத்த ஆண்டு மார்ச் மாத தொடக்கத்தில், ரஷ்யாவிலிருந்து பாகிஸ்தானுக்கு பொருட்களை கொண்டு செல்லும் சரக்கு ரயில் சோதனை ஓட்டம் தொடங்கும் என்று தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து