முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸி.யை வீழ்த்தி இந்திய அணி முன்னிலை பெறுமா? - 3-வது டெஸ்ட் இன்று பிரிஸ்பேனில் துவக்கம்

வெள்ளிக்கிழமை, 13 டிசம்பர் 2024      விளையாட்டு
India-Australia 2023-11-22

Source: provided

பிரிஸ்பேன் : இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் இன்று தொடங்குகிறது. இதில் வெற்றிப்பெற்று இந்திய அணி முன்னிலை பெறுமா என்ற ஆவல் ரசிகர்கள் இடையே மேலோங்கியுள்ளது.

5 போட்டிகள்...

ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் பெர்த்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியாவும், அடிலெய்டில் நடைபெற்ற 2-வது போட்டியில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள காபா மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

2 நாட்களில்.... 

இந்நிலையில் இந்த போட்டி நடைபெறும் 5 நாட்களும் பிரிஸ்பேனில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போட்டி தொடங்கும் முன் அங்கு 60 சதவீதம் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2-வது நாளில் 59 சதவீதம் மழையும், 3-வது நாளில் 60 சதவீதமும், கடைசி 2 நாட்களில் மழை பெய்ய வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.

காபா மைதானத்தில்....

3-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள காபாவில் ஸ்டேடியத்தில் இன்று இந்திய நேரப்படி அதிகாலை 5.50 மணிக்கு தொடங்குகிறது. கடைசியாக 2021-ல் காபா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் 32 வருடங்கள் கழித்து ஆஸ்திரேலியாவை தோற்கடித்த இந்தியா வரலாற்று வெற்றியை பெற்றது. அதேபோல் இம்முறையும் இந்திய அணி வெற்றி பெறும் முனைப்பில் உள்ளது.

ஆஸ்திரேலியா வெற்றி...

ஆனால் நடப்பு தொடரில் அடிலெய்டில் நடைபெற்ற 2-வது போட்டியில் இந்திய அணியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வீழ்த்தியது. இந்த போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு எதிராக ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் பவுன்சர்களை வீசினார். 2-வது இன்னிங்சில் 5 விக்கெட்டுகள் எடுத்த அவர் ஆஸ்திரேலியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றினார்.

கம்மின்ஸ் எச்சரிக்கை...

இந்நிலையில் காபாவிலும் இந்திய அணியை வீழ்த்த அதே போன்ற திட்டங்களை தயாராக வைத்துள்ளதாக ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் எச்சரித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "ஆம் அடுத்த போட்டியிலும் பவுன்சர்களை வீசுவதற்கு சாத்தியங்கள் உள்ளன. 2-வது போட்டியில் அது வேலை செய்தது. அது மட்டுமல்லாது எங்களிடம் வேறு திட்டமும் உள்ளது. நான் எப்போதும் 2 திட்டங்களை (ஏ மற்றும் பி) தயாராக வைத்திருப்பேன். ஒரு திட்டம் வேலையாகவில்லையெனில் மற்றொன்றை பயன்படுதுவேன்.

பயன்படுத்துவோம்...

2வது போட்டியில் அந்தத் திட்டம் வேலை செய்ததால் இந்தப் போட்டியிலும் ஏதோ ஒரு நேரத்தில் அதை நாங்கள் பயன்படுத்துவோம். காபா மைதானத்தை நேற்று நான் பார்த்தேன். அது கடந்த சில வருடங்களை போல் நன்றாக உள்ளது. கடந்த சில தினங்களாக சூரிய வெளிச்சமும் அதன் மீது நன்றாக பட்டது. இருப்பினும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடந்த போட்டியை போல் அது இருக்கும் என்று நான் நினைக்கவில்லை" என கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து