முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மருத்துவ, பொறியியல் உள்ளிட்ட உயர் கல்வியில் அருந்ததியர் மாணவர்கள் எண்ணிக்கை உயர்வு: அமைச்சர் தகவல்

வெள்ளிக்கிழமை, 17 ஜனவரி 2025      தமிழகம்
Mathivendan 2023-04-13

Source: provided

சென்னை : மருத்துவ, பொறியியல் படிப்பில் அருந்ததியர் மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-

திராவிட இயக்கமும் தமிழ்நாட்டின் சமூக நீதி வரலாறும் பிரிக்க முடியாத உறவை கொண்டவை. நீதிக்கட்சி இந்திய சட்டமன்ற வரலாற்றில் முதன்முதலில் இடஒதுக்கீடு முறையை அறிமுகப்படுத்தியது.  அந்த நீதிக் கட்சியின் நீட்சிதான் தி.மு.க அரசு.  

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்களின் சமூகநீதி உரிமைகளை நிலைநாட்டும் வகையில் தி.மு.க அரசு பல்வேறு வகையான இடஒதுக்கீட்டு சட்டங்களை இயற்றி வரலாறு படைத்துள்ளது. பட்டியலின மக்களிடையே மிகவும் பின்தங்கிய நிலையிலிருந்த அருந்ததியர் சமூக மக்களுக்கு 3 விழுக்காடு உள் ஒதுக்கீட்டை 2009-ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த போது வழங்கினார்  கலைஞர் கருணாநிதி.  

 அவர் வழங்கிய உள் ஒதுக்கீட்டின் பயனால் அதுவரை கல்வி, வேலைவாய்ப்புகளில் உரிய பிரதிநிதித்துவம் பெறாத அருந்ததியர் சமூக மக்கள், இன்றைக்கு உரிய பிரதிநிதித்துவத்தைப் பெற்று வருகிறார்கள் என்பதை சமீபத்தில் வெளியான தரவுகள் உறுதிப்படுத்தியிருக்கின்றன.  2018-19-ம் ஆண்டில் எம்.பி.பி.எஸ் மருத்துவப் படிப்பு சேர்க்கையில் 3,600 இடங்களில் 107 இடங்கள் அருந்ததியர் மாணவர்களுக்கு கிடைத்திருந்தன.  

ஒட்டு மொத்த பட்டியலின மக்களுக்கான இட ஒதுக்கீட்டில், உள் ஒதுக்கீட்டின் பயனால் அருந்ததியர் பிரிவு மாணவர்கள் பொறியியல் படிப்புகளில் 2016-17 ஆம் ஆண்டு அதி.மு.க ஆட்சியில் வெறும் 8.7 விழுக்காடு அளவில்தான் பயன் பெற்று வந்த நிலையில், 2023-24 ஆம் ஆண்டில் 16 விழுக்காடு பயனைப் பெற்றுள்ளனர். 

பகுத்தறிவைத் துணைக் கொண்டு ஆட்சி நடத்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு, எடுத்த முன்னெடுப்புகளால்தான் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை உச்ச நீதிமன்றத்தில் பெற்றதோடு, அருந்ததியர் சமூகத்தினர் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பில் உரிய பிரதிநிதித்துவத்தையும் பெற்றிருக்கிறார்கள்.  திராவிட மாடல் அரசு. சமூக நீதிக்கான  லட்சியப் பயணத்தில் இச்சாதனை ஒரு முக்கிய மைல்கல். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து