எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
'கிராண்ட்ஸ்லாம்' அந்தஸ்து கொண்ட ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்று ஆட்டத்தில் முன்னணி வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் - செக் குடியரசின் தாமஸ் மச்சாக் உடன் மோதினார்.
இந்த போட்டியில் தொடக்கம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோகோவிச் 6-1, 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் தாமஸ் மச்சாக்கை வீழ்த்தி 4வது சுற்றுக்கு முன்னேறினார். நாளை மறுநாள் நடைபெறும் 4வது சுற்று ஆட்டத்தில் ஜோகோவிச், செக் குடியரசின் ஜிரி லெஹெக்காவை எதிர்கொள்ள உள்ளார்.
___________________________________________________________________________________________
அயர்லாந்து அணிக்கு அபராதம்
அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இந்த தொடரில் 3-0 என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்று அயர்லாந்தை ஒயிட்வாஷ் ஆக்கியது. இந்த தொடரின் 3-வது போட்டி கடந்த 15-ம் தேதி ராஜ்கோட்டில் நடைபெற்றது. இதில் இந்திய அணி இந்தியா 304 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் அயர்லாந்து அணி குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்துவீசி முடிக்காதது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் அயர்லாந்து அணியில் உள்ள ஒவ்வொரு வீராங்கனைக்கும் போட்டி கட்டணத்தில் இருந்து தலா 10 சதவீதம் அபராதம் விதித்து ஐ.சி.சி. உத்தரவிட்டுள்ளது.
___________________________________________________________________________________________
ஒலிம்பிக்கில் செஸ்: குகேஷ்
சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்பு சாம்பியனாக வலம் வந்த சீனாவின் டிங் லிரெனை வீழ்த்தி குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். இதனையடுத்து, அவருக்கு பிரதமர் முதல் பல்வேறு துறை சார்ந்த பிரபலங்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட உலக செஸ் சாம்பியன் குகேஷ், ஒலிம்பிக்கில் செஸ் போட்டி இடம்பெறுவதைப் பார்க்க விரும்புகிறேன்.
அதிலும் குறிப்பாக ஒலிம்பிக் போட்டிகளை இந்தியா நடத்தும் பட்சத்தில், அதில் செஸ் இடம்பெறுவதைப் பார்க்க விரும்புகிறேன். செஸ் போட்டிக்கான வரவேற்பு மற்றும் ஆதரவு அதிகரித்துள்ளதாக நினைக்கிறேன். அதை நினைத்து எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒலிம்பிக்கில் செஸ் இடம்பெற்றால், அதனை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் செல்ல முடியும். ஒலிம்பிக்கில் செஸ் இடம்பெறுவதை எதிர்நோக்கி காத்திருக்கிறேன் என்றார்.
___________________________________________________________________________________________
பிப். 14-ல் மகளிர் பிரீமியர் லீக்
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது சீசன் இந்த ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. முதல் முறையாக போட்டிகள் நான்கு நகரங்களில் நடத்தப்படவுள்ளது. போட்டிகள் பரோடா, பெங்களூரு, மும்பை மற்றும் லக்னௌ ஆகிய நான்கு நகரங்களில் நடத்தப்படவுள்ளன. முதல் போட்டி பரோடாவில் புதிதாக கட்டப்பட்டுள்ள பிசிஏ மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி குஜராத் லயன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
பரோடா மற்றும் லக்னௌ இரண்டு நகரங்களிலும் முதல் முறையாக மகளிர் பிரீமியர் லீக் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. கடந்த ஆண்டு போட்டிகள் அனைத்தும் பெங்களூரு மற்றும் புது தில்லியில் நடைபெற்றன. இந்த ஆண்டு இறுதிப்போட்டி மும்பையில் வருகிற மார்ச் 15 ஆம் தேதி நடத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
___________________________________________________________________________________________
பயிற்சியில் ரோகித் சர்மா
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக, கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பயிற்சியில் ஈடுபடும் விடியோ இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டுள்ளது. அந்த விடியோவில் ரோஹித் சர்மா பல்வேறு விதமான ஷாட்டுகளையும் விளையாடி பயிற்சி மேற்கொள்வதைப் பார்க்க முடிகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் சர்மா, மும்பை அணியுடன் இணைந்து அண்மையில் பயிற்சி மேற்கொண்டார். இதனால், அவர் ரஞ்சி கோப்பையில் விளையாடவுள்ளார் எனவும் கூறப்பட்டது. இருப்பினும், ஜம்மு காஷ்மீருக்கு எதிராக ஜனவரி 23 ஆம் தேதி மும்பை அணி விளையாடும் போட்டியில் ரோஹித் சர்மா விளையாடுவாரா என்பது உறுதியாகத் தெரியவில்லை.
___________________________________________________________________________________________
இந்திய அணியில்... கருண் விருப்பம்
3 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கிரிக்கெட் விளையாடத் தொடங்கிய கருண் நாயர், விஜய் ஹசாரே டிராபியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களைக் குவித்து வருகிறார். இதுவரை அவர் 5 சதங்களை விளாசியுள்ளார். விதர்பா அணிக்காக நடப்பு விஜய் ஹசாரே தொடரில் 756 ரன்களை 756 ரன்கள் சராசரியுடன் குவித்துள்ளார். விஜய் ஹசாரே தொடரில் நம்ப முடியாத அளவுக்கு அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் கருண் நாயர், இந்திய அணிக்காக விளையாடும் எண்ணம் இன்னும் தனக்குள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது: அன்பான கிரிக்கெட்டே, எனக்கு இன்னொரு வாய்ப்பு கொடு. இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற கனவு எப்போதும் எனக்குள் இருக்கிறது. ஆமாம், இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற கனவு இன்னும் எனக்குள் இருந்துகொண்டிருக்கிறது. அதன் காரணமாகவே இந்த தொடரில் விளையாடிக் கொண்டிருக்கிறேன். என்னுடைய ஒரே இலக்கு இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்பதுதான் என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-11-2025.
15 Nov 2025 -
திருநள்ளாறு கோவில் ஊழியர்கள் வேலை நிறுத்தம்: பக்தர்கள் அவதி
15 Nov 2025புதுச்சேரி : திருநள்ளாறு கோவில் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் பக்தர்கள் அவதியடைந்தனர்.
-
எஸ்.ஐ.ஆருக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் த.வெ.க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்
15 Nov 2025சென்னை, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை கண்டித்து த.வெ.க. சார்பில் இன்று தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட இருக்கிறது.
-
4 ரிக்டர் அளவில் ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்
15 Nov 2025காபுல், ஆப்கானிஸ்தானில் 4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது.
-
பீகார் சட்டசபை தேர்தல்: ஆர்.ஜே.டி 23 சதவீத வாக்குகளை பெற்று முதலிடம்
15 Nov 2025பாட்னா : பீகாரில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அரசியல் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம் வெளியாகியுள்ளது.
-
தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளை உணவுத்திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
15 Nov 2025சென்னை, சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான உணவுத்திட்டத்தை சனிக்கிழமை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், டிசம்பர் முதல் தமிழகத்தில் அனைத்து மாநகராட்சி,
-
எஸ்.ஐ.ஆர். தொடர்பான கூட்டங்களுக்கு த.வெ.க.வையும் அழைக்க வேண்டும்;: தேர்தல் ஆணையத்திற்கு விஜய் கடிதம்
15 Nov 2025சென்னை : தேர்தல் ஆணையம் நடத்தும் கூட்டங்களுக்கு தமிழக வெற்றிக் கழகத்திற்கும் அழைப்பு விடுக்க வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அக்கட்சியின் தலைவர் விஜய் கடிதம் எழு
-
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வழக்கு: ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை
15 Nov 2025சென்னை : எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கில் ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை நடைபெறவுள்ளது.
-
பெண்களின் சுதந்திரம் கேள்விக்குறி: நடவடிக்கை எடுக்க வி.எச்.பி. வலியுறுத்தல்
15 Nov 2025சென்னை : தமிழகத்தில் பெண்களின் சுதந்திரம் கேள்விக்குறியாக உள்ளதையடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு வி.எச்.பி. வலியுத்தினார்.
-
பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள் மூலம் தேர்தல் ஆணையத்தின் தவறான செயல்கள் வெளிப்பட்டுள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
15 Nov 2025சென்னை, பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள் மூலம் தேர்தல் ஆணையத்தின் தவறான செயல்கள் வெளிப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் இது அனைவருக்குமான பாடம் என்
-
நவ்காம் காவல் நிலையத்தில் நடந்தது தற்செயலான வெடி விபத்துதான்: ஜம்மு காஷ்மீர் டி.ஜி.பி. விளக்கம்
15 Nov 2025ஸ்ரீநகர், காஷ்மீரில் நடந்தது தற்செயலான வெடி விபத்து தான் என்று ஜம்மு காஷ்மீர் டி.ஜி.பி. நலின் பிரபாத் தெரிவித்துள்ளார்.
-
வேடந்தாங்கலில் குவிந்த வெளிநாட்டு பறவைகள்
15 Nov 2025சென்னை, வேடந்தாங்கலில் வெளிநாட்டு பறவைகள் குவிந்தன.
-
20 ஆயிரம் தமிழர்களுக்கான வேலை வாய்ப்பு நழுவி விட்டது: அண்ணாமலை
15 Nov 2025சென்னை, தமிழகத்தில் 20 ஆயிரம் பேருக்கான வேலை வாய்ப்பு நழுவி விட்டது என்று அண்ணாமலை தெரிவித்தார்.
-
டெல்லி கார் வெடிப்பு வழக்கு; மேலும் ஒரு டாக்டர் பஞ்சாப்பில் கைது
15 Nov 2025சண்டிகார் : டெல்லியில் கார் வெடி வழக்கில் பஞ்சாபில் மேலும் ஒரு டாக்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
பீகார் தேர்தல் முடிவுகள் தமிழகத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது: டி.டி.வி.தினகரன்
15 Nov 2025சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க - த.வெ.க இடையேதான் போட்டி என்று டி.டி.வி.தினகரன் கூறினார்.
-
பீகார் தேர்தல் இறுதி நிலவரம்
15 Nov 2025பாட்னா : பீகார் இறுதி நிலவரம் வெளியாகியுள்ளது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணி 202 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தொடர் சரிவில் தங்கம் விலை
15 Nov 2025சென்னை, தங்கம் விலை நேற்றும் சரிந்தது.
-
கேளம்பாக்கம் அருகே விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப்பெட்டி கண்டுபிடிப்பு
15 Nov 2025திருப்போரூர், கேளம்பாக்கம் அருகே விபத்துக்குள்ளான பயிற்சி விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டது.
-
காவல் நிலைய குண்டுவெடிப்பு எதிர்பாராத நிகழ்வு: மத்திய அரசு
15 Nov 2025புதுடெல்லி : ஜம்மு காஷ்மீரின் நவ்காம் காவல் நிலையத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு எதிர்பாராத நிகழ்வு என்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஜம்மு காஷ்மீர் பிரிவு இணை செயலாளர்
-
அரசியலில் இருந்து விலகினார் லல்லு பிரசாத் மகள் ரோகிணி
15 Nov 2025பாட்னா, அரசியலில் இருந்து விலகுகிறேன் என்று லல்லு பிரசாத்தின் மகள் ரோகிணி ஆச்சார்யா அறிவித்துள்ளார்.
-
தமிழகம் முழுவதும் ஆசிரியர் தகுதித்தேர்வு 2-ம் தாள் தேர்வு இன்று நடைபெறுகிறது
15 Nov 2025சென்னை : தமிழகம் முழுவதும் ஆசிரியர் தகுதித்தேர்வின் 2-ம் தாள் தேர்வு இன்று நடைபெறுகிறது.
-
ஐ.நா. பொதுச்செயலாளருடன் ஜெய்சங்கர் சந்திப்பு
15 Nov 2025வாஷிங்டன், ஐ.நா. பொதுச்செயலாளரை சந்தித்து பேசிய இந்திய வெளியுறவத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இந்தியாவிற்கு வருமாறு அவருக்கு அழைப்பு விடுத்தார்.
-
பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள் எனக்கு ஆச்சரியமளிக்கிறது: ராகுல்
15 Nov 2025பாட்னா, பீகார் தேர்தல் முடிவுகள் எனக்கு ஆச்சரியமளிக்கிறது என்று ராகுல் காந்தி கூறினார்.
-
பயங்கரவாத அச்சுறுத்தல்: அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: கார்கே வலியுறுத்தல்
15 Nov 2025டெல்லி, அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று கார்கே வலியுறுத்தியுள்ளார்.
-
ரஜினியின் 173-ம் படத்தில் இருந்து இயக்கனர் சுந்தர் சி விலகல் ஏன்..? கமல்ஹாசன் பதில்
15 Nov 2025சென்னை, ரஜினிக்கு கதை பிடிக்கும் வரையில் கதை கேட்டுக்கொண்டே இருப்போம் என அவரது 173-வது திரைப்படத்தின் தயாரிப்பாளர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.



