எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
புதுடெல்லி : டெல்லியில் தேர்தல் விதிமீறல் தொடர்பாக 1,100 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டசபைக்கு கடந்த 5ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு இன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தல் நடத்தை விதிமுறைகள், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனே நடைமுறைக்கு வந்தன.
இந்நிலையில், தேர்தல் விதிமீறல் தொடர்பாக இதுவரை டெல்லி போலீசார் 1,100 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்குகள் தொடர்பாக 35,000க்கும் மேற்பட்டவர்களை கைது டெல்லி போலீசார் செய்துள்ளனர் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த வழக்குகள் அனைத்தும் கடந்த மாதம் 7ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
477 சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் 538 தோட்டாக்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர், மேலும் 499 பேர் ஆயுதச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், போலீசார் 1,15,103 லிட்டர் மதுபானங்களை பறிமுதல் செய்துள்ளனர் எனவும் இதுதொடர்பாக 1,426 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல ரூ.77.9 கோடிக்கு மேல் போதைப்பொருட்கள், 1,200க்கும் மேற்பட்ட தடைசெய்யப்பட்ட ஊசிகள், அமலாக்கத்துறை அதிகாரிகள் ரூ.11.70 கோடி ரொக்கம் மற்றும் 37.39 கிலோ வெள்ளியையும் பறிமுதல் செய்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |