முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திடீர் மின் தடையால் கியூபா இருளில் மூழ்கியது

சனிக்கிழமை, 15 மார்ச் 2025      உலகம்
Power-cut-2025-03-15

ஹவானா, கியூபாவில் திடீரென ஏற்பட்ட மிகப்பெரிய அளவிலான மின்வெட்டு காரணமாக அந்நாட்டின் பல மாகாணங்கள் இருளில் மூழ்கின. 

கியூபா தலைநகரான ஹவானா அருகிலுள்ள தீஸ்மெரோ துணை மின் நிலையத்தில் நேற்றுமுன்தினம் இரவு மின் தடை ஏற்பட்டது. இதன் காரணமாக தெற்கு கியூபா உள்பட நாட்டின் பல மாகாணங்களில் லட்சக்கணக்கான மக்கள் இருளில் மூழ்கியுள்ளனர். இது தேசிய மின்சாரத் துறையின் தோல்வி. இதனை சரிசெய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது’ என கியூபா எரிசக்தி மற்றும் சுரங்கத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இந்த மின் தடையைத் தொடர்ந்து ஹவானா உள்பட பல மாகாணங்களில் ஜெனரேட்டர்கள் உள்ள இடங்கள் அன்றி மற்ற இடங்கள் இருளாக உள்ளன. இணைய சேவையும் நாடு முழுக்க பாதிப்படைந்துள்ளது. அதிக தேவை ஏற்படும்  நேரங்களில் பொதுவாக 3,250 மெகாவாட் மின் தேவை இருக்கும். ஆனால், தற்போது மின் தடையால் 1,380 மெகா வாட் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன்படி, நாட்டின் மொத்த மின் தேவையில் 42 சதவீதம் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. சமீபமாக ஏற்பட்ட மின் தடை சம்பவங்களில் இது பெரியது இல்லை என்று கூறப்படுகிறது.

கியூபா கடந்தாண்டு இறுதியில் மட்டும் 3 பெரிய மின்சார செயலிழப்புகளைக் கண்டுள்ளது. பொருளாதார நெருக்கடியில் இருந்த இந்நாடு, முழுவதுமாக இருளில் மூழ்கியது. இங்குள்ள மின்சாரக் கட்டுமானங்கள் அடிக்கடி செயலிழக்கின்றன. முக்கிய வேலை நேரங்களில் நாட்டின் பெரும்பாலான பகுதிகள் இருளில் மூழ்குகின்றன. எரிபொருள் பற்றாக்குறை, உழமையான உள்கட்டமைப்பு காரணமாக இவை நிகழ்வதாகக் கூறப்படுகிறது.

பெரும்பாலான இடங்களில் சமைப்பதற்கும், நீர் எடுப்பதற்கும் மின்சாரத் தேவை உள்ளது. இதனைத் தொடர்ந்து, நாடு முழுக்க 12-க்கும் மேற்பட்ட சூரிய மின் உற்பத்தி பூங்காக்களை நிறுவ அரசு முடிவெடுத்த நிலையில், இந்தாண்டு அவை செயல்பாட்டுக்கு வரவுள்ளன. இதனால், மின் தடை பிரச்சனைகள் குறையுமென்று கூறப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து