முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு

வெள்ளிக்கிழமை, 21 மார்ச் 2025      உலகம்
Indonesia 2025-03-21

Source: provided

இந்தோனேசியா : இந்தோனேசியாவின் மத்திய தெற்கு மாகாணத்திலுள்ள எரிமலை வெடித்துச் சிதறியுள்ளது.

இந்தோனேசியாவின் கிழக்கு நுஸா தெங்காரா மாகாணத்தின் ப்ளோரஸ் தீவிலுள்ள லெவோடோபி லகி லகி எனும் எரிமலை நேற்று முன்தினம் நள்ளிரவு வெடித்துச் சிதறியுள்ளது. அதனைத் தொடர்ந்து, நேற்று காலைக்குள் அந்த எரிமலை மொத்தம் மூன்று முறை வெடித்து அப்பகுதியில் 8,000 மீட்டர் உயரத்திற்கு சாம்பல் படலம் பரவியுள்ளதாகக் கூறப்படுகின்றது. இந்நிலையில், தற்போது எந்தவொரு வெடிப்புமின்றி அமைதியாகக் காணப்படும் அந்த எரிமலையை தீவிரமாக இந்தோனேசியா அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

மேலும், அந்த எரிமலை இருக்கும் மாகாணத்தில் கடந்த சில காலமாக நூற்றுக்கணக்கான நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாகவும் கடந்த 7 நாள்களாக அந்த எரிமலையின் செயல்பாடுகள் அதிகரித்து காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அந்நாட்டு அதிகாரிகள் எரிமலை வெடிப்பிற்கு உச்சக்கட்ட எச்சரிக்கைகளை அறிவித்து அப்பகுதியின் அபாய மணடலத்தை 7 கிலோ மீட்டரிலிருந்து 8 கி.மீ. ஆக உயர்த்தியுள்ளனர்.

இந்த எரிமலை வெடிப்பினால், ஆஸ்திரேலியாவிலிருந்து இந்தோனேஷியாவின் பாலி தீவிற்கு இயக்கப்படும் பெரும்பாலான விமானங்கள் ரத்து செய்யப்பட்டதுடன், அத்தீவிற்கான பிற சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்கள் தாமதமாகியுள்ளது. முன்னதாக, கடந்த 2024 நவம்பர் மாதம் லெவோடோபி லகி லகி எரிமலை வெடித்ததில் 9 பேர் பலியானதுடன் ஏராளமானோர் படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து