முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை ஐ.பி.எல். போட்டியில் அனிருத்தின் இசை நிகழ்ச்சி

ஞாயிற்றுக்கிழமை, 23 மார்ச் 2025      விளையாட்டு
Anirudh 2025-03-21

Source: provided

சென்னை: சென்னையில் நடந்த ஐ.பி.எல். போட்டிக்கு முன்பாக இசையமைப்பாளர் அனிருத்தின் இசை நிகழ்ச்சி நடந்தது.

18வது ஐ.பி.எல்...

  18வது பிரீமியர் லீக் கிரிக்கெட் (ஐ.பி.எல்.)தொடரின் 3வது லீக் ஆட்டத்தில் சென்னை, மும்பை அணிகள்  நேற்று மோதின. இரு அணிகளும் தலா 5 முறை கோப்பையை வென்றுள்ளதால், இந்த சீசனில் அதிக எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. குறிப்பாக, இந்தத் தொடரோடு தோனி ஓய்வு பெற இருப்பதாக தகவல் வெளியாகி வருவதால், அவருடைய ஆட்டத்தை கடைசியாக பார்த்து விட வேண்டும் என்று ரசிகர்கள் மைதானத்தில் குவிந்து வருகின்றனர். அஸ்வின், விஜய் ஷங்கர் உள்ளிட்ட வீரர்களின் வருகையும் சென்னை அணி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அனிருத் இசை நிகழ்ச்சி...

இந்த நிலையில், சென்னையில் பிரீமியர் லீக் போட்டியின் தொடக்க நிகழ்ச்சியையொட்டி, இசையமைப்பாளர் அனிருத்தின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அவர் பாடிய பாடல்கள் மைதானத்தில் இருந்த ரசிகர்களை வைப் ஆக்கியது. தொடர்ந்து, மும்பைக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெயிக்வாட் பவுலிங்கை தேர்வு செய்தார். ராகுல் திரிபாதி, கமலேஷ் நாகர்கோடி, விஜய் ஷங்கர், ஜேமி ஓவர்டன், ஷேக் ரஷித் ஆகியோர் சென்னையின் இம்பேக்ட் வீரர்களாக உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து