முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் விவகாரம்: பாராளுமன்றத்தில் பா.ஜ. எம்.பி.க்கள் கடும் அமளி

திங்கட்கிழமை, 24 மார்ச் 2025      இந்தியா
Parliament-2024-11-27

Source: provided

புதுடெல்லி : கர்நாடகாவில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியால் இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.

பாராளுமன்றத்தின்    இரு அவைகளும் நேற்று காலை வழக்கம் போல கூடின. சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் மக்களவை கூடியதும், சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் பதாகைகளைக் காண்பித்து அமளியில் ஈடுபட்டனர். அமளியில் ஈடுபட்ட உறுப்பினர்களை அமைதி காக்குமாறும், கேள்வி நேரம் தொடர அனுமதிக்குமாறும் ஓம் பிர்லா பலமுறை வேண்டுகோள் விடுத்தார்.

எனினும், அவரது வேண்டுகோளை ஏற்காத சமாஜ்வாதி கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து கோஷங்களை எழுப்பினர். இதனால், அவையை நண்பகல் 12 மணிக்கு ஒத்திவைப்பதாக ஓம் பிர்லா அறிவித்தார். இதையடுத்து அவை கூடியதும், கர்நாடக இட ஒதுக்கீடு விவகாரம் எதிரொலித்தது. இது தொடர்பாக பாஜக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அதேபோல, மாநிலங்களவையிலும், கர்நாடகா விவகாரம் எதிரொலித்தது. அதாவது கர்நாடகாவில் சிறுபான்மையினருக்கு பொதுப்பணித்துறை ஒப்பந்தங்களில் 4 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் அம்மாநில அரசின் முடிவு குறித்து மல்லிகார்ஜூன கார்கே விளக்கம் அளிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறினார். 

மாநிலங்களவை தலைவர் ஜக்தீப் தன்கர் தலைமையில் நேற்று அவை கூடியதும், "கர்நாடகாவில் அரசு ஒப்பந்தப் பணிகளுக்கு முஸ்லிம்களுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் அம்மாநில காங்கிரஸ் அரசின் முடிவு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே விளக்கம் அளிக்க வேண்டும்" என பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான கிரண் ரிஜிஜு வலியுறுத்தினார்.

அவருக்கு ஆதரவாக, ஆளும் கூட்டணியைச் சேர்ந்த முன்வரிசை எம்பிக்கள் கோஷங்களை எழுப்பினர். கிரண் ரிஜிஜு கூறுகையில், அரசியலமைப்புப் பதவியில் இருக்கும் மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவர், முஸ்லிம் சமூகத்திற்கு இடஒதுக்கீடு வழங்குவதற்காக இந்திய அரசியலமைப்பை அவர்கள் (காங்கிரஸ்) மாற்றப் போகிறார்கள் என்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையை நாங்கள் எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது என தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பேசிய பாஜக தலைவரும் மத்திய அமைச்சருமான ஜே.பி.நட்டா, மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்படாது என்று அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.

கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமாரின் கருத்துக்கு எதிராக பா.ஜ.க. எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து பேசிய மல்லிகார்ஜுன் கார்கே, அரசியலமைப்பைப் பாதுகாக்க நாடு முழுவதும் இந்திய ஒற்றுமை யாத்திரையை மேற்கொண்ட கட்சி காங்கிரஸ் என கூறினார். இரு தரப்பிலிருந்தும் கூச்சல் குழப்பம் அதிகரித்ததை அடுத்து, அவைத் தலைவர் தன்கர் பிற்பகல் 2 மணி வரை அவையை ஒத்திவைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து