முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

'சிங்கார சென்னை' புதிய பயண அட்டை அறிமுகம்

புதன்கிழமை, 26 மார்ச் 2025      தமிழகம்
Singara-Chennai-introduced-

சென்னை, சிங்கார சென்னை என்ற புதிய போக்குவரத்து பயண அட்டை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-தமிழக முதல்வரின் உத்தரவின்படி, மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி மற்றும் மாநகர் போக்குவரத்துக் கழகம் இணைந்து வழங்கும் 'சிங்கார சென்னை' பயண அட்டை வாயிலாக பயணிகள் பயணச்சீட்டு பெற்று பயணம் மேற்கொள்ள ஏதுவாக, போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், நேற்று தலைமைச் செயலகத்தில் அறிமுகம் செய்து வைத்தார். 

சிங்கார சென்னை பயண அட்டையானது, பயணிகளுக்கு தடையற்ற மற்றும் பணமில்லா பரிவர்த்தனை பயண அனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட தொலைநோக்குத் திட்டமாகும். மாநகர் போக்குவரத்துக் கழக அனைத்துப் பேருந்துகளிலும், ஏற்கனவே சிங்கார சென்னை பயண அட்டையை பயன்படுத்தும் வகையில், மின்னனு பயணச்சீட்டு வழங்கும் இயந்திரம் உபயோகத்தில் உள்ளது. இத்திட்டத்தில், ஏற்கனவே பாரத ஸ்டேட் வங்கி வாயிலாக “சிங்கார சென்னை” பயண அட்டைகள் வழங்கப்படுகிறது.  இதில், 30,000-க்கும் மேலான பயண அட்டைகள் பயணிகளுக்கு வழங்கப்பட்டு, ஒவ்வொரு நாளும் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயன்படுத்தி பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

இத்திட்டத்தினை மேலும் விரிவுப்படுத்தும் வகையில் ஏர்டெல் பேமென்ட்ஸ் வங்கி சென்னை மாநகரின் முக்கிய பேருந்து நிலையங்கள் மற்றும் பயணிகள் பயன்பாடு அதிகம் உள்ள பேருந்து நிறுத்தங்களிலும் இந்த “சிங்கார சென்னை” பயண அட்டை ரூ.100/-க்கு வழங்கப்படும்.  இதில் ரூ.50/- மதிப்புக்கான பயணம் மேற்கொள்ளலாம். மேற்கொண்டு பயணம் மேற்கொள்ள இவ்வட்டைகளை இணையவழி சேவை, கைப்பேசி செயலி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கியின் விற்பனை மையங்கள் மூலமாக எளிதாக ரீசார்ஜ் செய்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து