முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ம.க.விற்குள் இருந்த சலசலப்பு சரியாகி விட்டது: ஜி.கே. மணி பேட்டி

செவ்வாய்க்கிழமை, 15 ஏப்ரல் 2025      தமிழகம்      அரசியல்
gk-mani

சென்னை, பாட்டாளி மக்கள் கட்சியில் நிலவிய உள்கட்சி பூசல் சரியாகிவிட்டதாக அக்கட்சியின் கெளரவத் தலைவர் ஜி.கே.மணி   தெரிவித்தார்.

பாட்டாளி மக்கள் கட்சிக்குள் உள்கட்சி பூசல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தானே தலைவராக செயல்படவுள்ளதாகவும் தலைவராகவுள்ள அன்புமணியை செயல் தலைவராக நியமிப்பதாகவும் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

இதையடுத்து, கட்சிப் பொதுக்குழுவால் விதிகளின்படி தேர்ந்தெடுக்கப்பட்டு தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட தானே தலைவராகத் தொடர்வேன் என்று அன்புமணி ராமதாஸ் பதில் அறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதனிடையே, கடந்த இரண்டு நாள்களாக ராமதாஸ் மற்றும் அன்புமணிக்கு இடையே கட்சி நிர்வாகிகளும் குடும்பத்தினரும் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இந்த நிலையில், நேற்று தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பங்கேற்ற ஜி.கே. மணி செய்தியாளர்களுடன் பேசுகையில்,  மாமல்லபுரத்தில் சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் மாநாடு வருகின்ற மே 11 ஆம் தேதி மிகப் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. பா.ம.க. தனிக் கொள்கைகள் கொண்ட தனித்துவமான கட்சி. ராமதாஸ் - அன்புமணி ராமதாஸ் இருவரும் மாநாட்டில் ஒன்றாக கலந்து கொள்வார்கள். கட்சிக்குள் சலசலப்பு இருந்தது அனைவருக்கும் தெரியும். அந்த பிரச்னைகள் சரியாகிவிட்டது. தற்போது எந்த பிரச்னையும் இல்லை. அந்த பிரச்னை மேலும் பெரிதாகாது” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து