முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் ‘ஏசி’ மின்சார ரயில் சேவை தொடங்கியது : குறைந்தபட்ச கட்டண் ரூ.35-ஆக நிர்ணயம்

சனிக்கிழமை, 19 ஏப்ரல் 2025      தமிழகம்
Vande-Bharat

Source: provided

சென்னை : சென்னையில் முதன்முறையாக ‘ஏசி’ மின்சார ரயில் நேற்று (ஏப்.19) முதல் இயங்கத் தொடங்கியுள்ளது.குறைந்தபட்சமாக ரூ.35-ம், அதிகபட்சமாக ரூ.105ம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

சென்னை ஐ.சி.எப்., ஆலையில், தயாரிக்கப்பட்ட 12 பெட்டிகள் கொண்ட முதல் ‘ஏசி’ மின்சார ரயிலில் அமர்ந்தபடி 1,116 பேரும், நின்று கொண்டு 3,798 பேரும் என மொத்தம் 4,914 பேர் பயணிக்க முடியும். இந்த ‘ஏசி’ மின்சார ரயில் சேவையை பிரதமர் மோடி கடந்த 6-ம் தேதி தொடங்கி வைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால், தொடங்கப்படவில்லை. இந்நிலையில், சென்னையில் முதல் ‘ஏசி’ மின்சார ரயில் சேவை நேற்று தொடங்கியது. சென்னை கடற்கரையில் இருந்து காலை 7, பிற்பகல் 3:45, இரவு 7:35 மணி ஆகிய நேரங்களில் புறப்படும் ‘ஏசி’ ரயில், தாம்பரத்துக்கு காலை 7:42, மாலை 4:26, இரவு 8.30 மணி ஆகிய நேரங்களில் சென்றடைகிறது. அங்கிருந்து புறப்படும் முதல் இரண்டு சேவை, செங்கல்பட்டுக்கு முறையே காலை 8:35, மாலை 5:25 மணிக்கு செல்கிறது.

செங்கல்பட்டில் இருந்து காலை 9, மாலை 5:45 மணிக்கு புறப்படும் ரயில், தாம்பரத்துக்கு காலை 9:41, மாலை 6:26 மணிக்கு வருகிறது. அங்கிருந்து புறப்பட்டு சென்னை கடற்கரைக்கு காலை 10:30, இரவு 7:15 மணிக்கு செல்கிறது. தாம்பரத்தில் அதிகாலை 5:45 மணி ரயில் புறப்பட்டு , காலை 6:45 மணிக்கு கடற்கரைக்கு இயக்கப்படுகிறது. இந்த ரயில் அதிகாலையில் தாம்பரம் பணிமனையில் இருந்து புறப்பட்டு கடற்கரை வந்தடையும் போதும், இரவில் கடற்கரையில் இருந்து தாம்பரம் பணிமனைக்கும் செல்லும் போதும் புறநகர் பாதையில் இயக்கப்படும்.

பிரதான பாதையில் செல்லும்போது, இந்த ரயில் கோட்டை, பூங்கா, எழும்பூர், மாம்பலம், கிண்டி, பரங்கிமலை, தாம்பரம், பெருங்களத்துார், கூடுவாஞ்சேரி, பொத்தேரி, சிங்கப்பெருமாள் கோவில், பரனுார் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.  இந்த ரயில் குறைந்தபட்சமாக ரூ.35-ம், அதிகபட்சமாக ரூ.105ம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மின்சார ரயில் முதல் வகுப்பு சீசன் டிக்கெட் வைத்திருப்பவர்கள் இந்த ரயிலில் பயணிக்க அனுமதி கிடையாது. இந்த ரயிலுக்காக தனி கட்டண அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து