முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக சட்டசபையில் வானதி - அமைச்சர் கீதா ஜீவன் இடையே காரசார விவாதம்

திங்கட்கிழமை, 28 ஏப்ரல் 2025      தமிழகம்
Geetha-Jivan 2023 04 17

Source: provided

சென்னை : தமிழக சட்டசபையில் 'பெண்கள் பாதுகாப்பு' தொடர்பாக பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், அமைச்சர் கீதா ஜீவன் இடையே காரசார விவாதம் நடந்தது.

நீண்ட பாரம்பரியம் கொண்ட தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் குற்றம் சாட்டினார். இதற்கு பதில் அளித்த அவை முன்னவர் துரைமுருகன், வாரணாசியில் 23 பேர் சேர்ந்து ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். ராமாயணத்திலே பெண்ணை தூக்கிச் சென்றனர். எல்லா இடத்திலும் நல்லவர்களும் இருப்பார்கள் கெட்டவர்களும் இருப்பார்கள் என்று கூறினார். 

எனக்கு அச்சம் உள்ளது என வானதி கூறியவுடன் உங்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது அரசின் கடமை என சபாநாயகர் அப்பாவு பதில் அளித்தார்.  இதைத்தொடர்ந்து பேசிய அமைச்சர் கீதா ஜீவன், தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு சிறப்பாக இருக்கிறது. காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து