எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், தர்மசாலா திடலில் பஞ்சாப் கிங்ஸ் - டில்லி கேபிடல்ஸ் இடையிலான போட்டி வியாழக்கிழமை இரவு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதல் காரணமாக திடலின் விளக்குகள் அணைக்கப்பட்டு ரசிகர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இரு அணி வீரர்களையும் திடலில் இருந்து பாதுகாப்பாக ஹோட்டலுக்கு காவலர்கள் அழைத்துச் சென்றனர்.
இந்த நிலையில், தர்மசாலாவில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டில்லி கேபிடல்ஸ் அணிகளின் வீரர்கள், பயிற்சியாளர்கள், உதவிப் பணியாளர்கள், ஒளிபரப்பு பணியாளர்கள் என மொத்தம் 300-க்கும் அதிகமானோர் ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தற்போதைய சூழலில் இவர்கள் அனைவரையும் விமானம் மூலம் மீட்க முடியாது என்பதால், சிறப்பு வந்தே பாரத் ரயில் மூலம் டில்லிக்கு பாதுகாப்பாக அழைத்துவர பி.சி.சி.ஐ. முடிவு செய்துள்ளது.
_____________________________________________________________________________________________________________________________
போர் சூழல்: அம்பத்தி ராயுடு கருத்து
இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில், பாகிஸ்தான் நடத்தி வரும் தாக்குதலையடுத்து இந்தியாவும் பதிலடி கொடுத்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு தர்மசாலாவில் நடைபெற்ற ஐபிஎல் போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. பின்னர் ரசிகர்கள் வெளியேற்றப்பட்டனர். கிரிக்கெட் வீரர்கள், தொழில்நுட்ப குழிவினர்கள் பாதுகாப்பாக விடுதியில் தங்க வைக்கப்பட்டு ள்ளார்கள். இவர்களை சிறப்பு வந்தே பாரத் ரயில் மூலம் டில்லிக்கு பாதுகாப்பாக அழைத்துவர பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு கூறியதாவது: கண்ணுக்குக் கண் என்பது மொத்த உலகத்தையும் குருடாக்கிவிடும். இது கோழைத்தனம் என்பதல்ல, ஞானம் என்பதை தெரிந்துகொள்ளுங்கள். நீதி நிலைநாட்டப்படும், ஆனால் மனிதாபிமானத்தை இழந்துவிடக்கூடாது. கருணையை நமது இதயத்தில் வைத்தும் நமது நாட்டை தீவிரமாக நேசிக்கலாம். நாட்டுப் பற்றும் அமைதியும் கைகள் பிடித்து நடக்கலாம் எனக் கூறினார்.
_____________________________________________________________________________________________________________________________
மீண்டும் மும்பை அணியில் ஜெய்ஸ்வால்
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், உள்ளூர் கிரிக்கெட்டில் மும்பை அணிக்காக விளையாடி வந்தார். இந்நிலையி திடீரென மும்பை அணியில் இருந்து கோவா அணியில் ஆடுவதற்கு ஒப்புக் கொண்டனர். இவர் விலகுவதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் மும்பை அணியின் மூத்த வீரரான ரகானேவுடன் ஏற்பட்ட மோதல்தான் முக்கிய காரணம் என்று தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் இந்த முடிவை மாற்றிய ஜெய்ஸ்வால் மீண்டும் மும்பை அணியில் தொடர விரும்புவதாக தெரிவித்துள்ளார். மேலும் மும்பை கிரிக்கெட் சங்கம் வழங்கிய தடையில்லா சான்றிதழை திரும்ப பெறுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார். மும்பை கிரிக்கெட் சங்கம், பி.சி.சி.ஐ. மற்றும் கோவா கிரிக்கெட் சங்கத்துடன் கலந்தாலோசித்து இது குறித்து முடிவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
_____________________________________________________________________________________________________________________________
ராணுவம் குறித்த கோலியின் பதிவு வைரல்
காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலம் தாக்கி அழித்தது. இந்த சூழலில் பாகிஸ்தானின் தாக்குதல்களை இந்தியா திறம்பட சமாளித்து பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இந்திய ராணுவத்தை பல விளையாட்டு வீரர்ளும், சினிமா பிரபலங்களும், பல்வேறு நட்சத்திரங்களும் பாராட்டி வருகின்றனர்.
அந்த வரிசையில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "இந்த கடினமான காலங்களில் நமது நாட்டை கடுமையாகப் பாதுகாத்ததற்காக நமது ஆயுதப் படைகளுடன் நாங்கள் ஒற்றுமையுடன் நிற்கிறோம். அவர்களுக்கு வணக்கம் செலுத்துகிறோம். நமது மாவீரர்களின் அசைக்க முடியாத துணிச்சலுக்கும், நமது மகத்தான தேசத்திற்காக அவர்களும் அவர்களது குடும்பத்தினரும் செய்யும் தியாகங்களுக்கும் மனமார்ந்த நன்றியுணர்வுக்கும் நாங்கள் என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம். ஜெய் ஹிந்த்" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


