முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2026 தேர்தல்: அங்கீகரிக்கப்படாத கட்சிகள் பொதுச்சின்னம் கோரி விண்ணப்பிக்கலாம் : மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 16 மே 2025      தமிழகம்
Election 2024-04-08

Source: provided

சென்னை : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட அங்கீகரிக்கப்படாத கட்சிகள், வரும் நவம்பர் 11-ம் தேதி முதல் பொதுச்சின்னம் கோரி விண்ணப்பிக்கலாம் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ், தே.மு.தி.க. , வி.சி.க., ம.தி.மு.க., பா.ம.க., த.வெ.க. நாம் தமிழர் உள்பட பல்வேறு கட்சிகள் தற்போதே தேர்தல் நடவடிக்கைகளை தொடங்கி விட்டன.

இந்த நிலையில், 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட அங்கீகரிக்கப்படாத கட்சிகள், வரும் நவம்பர் 11-ம் தேதி முதல் பொதுச்சின்னம் கோரி விண்ணப்பிக்கலாம் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பீகார், தமிழ்நாடு, மேற்கு வங்காளம், அசாம், கேரளா உள்பட 5 மாநில தேர்தலுக்கு பொதுச்சின்னம் கோரி விண்ணப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இது சட்டமன்றத்தின் ஆயுட்காலம் முடிவதற்கு 6 மாதம் முன்பாக பொதுச்சின்னம் கோரலாம் என்ற விதியின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. தமிழ்நாடு சட்டசபையின் ஆயுட்காலம் 2026 மே 10-ம் தேதியுடன் முடிவடைகிறது. மேலும் இவ்வாண்டு இறுதியில் நடைபெறும் பீகார் சட்டமன்ற தேர்தலுக்கும் பொதுச்சின்னம் கோரி வருகிற 23-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து