முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். போட்டிகள் இன்று முதல் மீண்டும் தொடக்கம்

வெள்ளிக்கிழமை, 16 மே 2025      விளையாட்டு
IPL 2023 08 02

Source: provided

புதுடில்லி : ஐ.பி.எல். போட்டிகள் இன்று முதல் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில் ஐ.பி.எல். தொடரில் டில்லி கேபிடல்ஸ் அணிக்காக வங்கதேச வேகப் பந்துவீச்சாளர் முஸ்தபிசூர் ரஹ்மான் விளையாடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று முதல்... 

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பதற்றம் காரணமாக ஐ.பி.எல். போட்டிகள் ஒரு வாரத்துக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றமான சூழல் முடிவுக்கு வந்ததையடுத்து, மீதமுள்ள ஐ.பி.எல். போட்டிகள் இன்று (மே 17) முதல் நடத்தப்பட உள்ளன.

குழப்பம்...

டில்லி கேபிடல்ஸ் வீரர் ஜேக் பிரேசர் மெக்கர்க்குக்குப் பதிலாக வங்கதேச வேகப் பந்துவீச்சாளர் முஸ்தபிசூர் ரஹ்மான் இறுதிக்கட்ட போட்டிகளுக்காக டில்லி அணியால் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இருப்பினும், ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான டி20 தொடரில் விளையாடுவதற்காக முஸ்தபிசூர் ரஹ்மான் புறப்பட்டதால், அவர் டில்லி கேபிடல்ஸுக்காக விளையாடுவாரா? மாட்டாரா? என்ற குழப்பம் ஏற்பட்டது.

விளையாடுவது உறுதி...

டில்லி கேபிடல்ஸ் அணிக்காக மே 18 முதல் மே 24 வரையிலான போட்டிகளில் விளையாட முஸ்தபிசூர் ரஹ்மானுக்கு வங்கதேச கிரிக்கெட் வாரியம் அனுமதி வழங்கியுள்ளது.  இது தொடர்பாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது: வங்கதேச அணியின் வேகப் பந்துவீச்சாளர் முஸ்தபிசூர் ரஹ்மானுக்கு இந்தியாவில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். போட்டிகளில் விளையாட வங்கதேச கிரிக்கெட் வாரியம் அனுமதியளித்துள்ளது. மே 18 ஆம் தேதி முதல் மே 24 ஆம் தேதி வரையிலான போட்டிகளில் விளையாட அவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லீக் போட்டிகளில் மட்டுமே...

வங்கதேச அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டி20 தொடர் வருகிற மே 25 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. அதன் காரணமாகவே, முஸ்தஃபிசூர் ரஹ்மானுக்கு மே 24 ஆம் தேதி வரை மட்டுமே டில்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதனால், டில்லி கேபிடல்ஸ் அணிக்காக கடைசி மூன்று லீக் போட்டிகளில் மட்டுமே அவரால் விளையாட முடியும். டில்லி கேபிடல்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் பட்சத்தில், அவரால் அந்த போட்டிகளில் விளையாட முடியாது.

11 போட்டிகளில்.... 

நடப்பு ஐ.பி.எல். தொடரில் இதுவரை 11 போட்டிகளில் விளையாடியுள்ள டில்லி கேபிடல்ஸ் அணி, 6 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கான போட்டியில் நீடிக்கும் டில்லி அணிக்கு அடுத்து வரும் போட்டிகளில் வெற்றி பெறுவது மிகவும் முக்கியம். டில்லி கேபிடல்ஸ் அணி இன்று மறுநாள் (மே 18) டில்லியில் நடைபெறும் அதன் அடுத்தப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸை எதிர்த்து விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து