முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடகாவில் 5 முக்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றம்: ராகுல் காந்தி பெருமிதம்

செவ்வாய்க்கிழமை, 20 மே 2025      இந்தியா
Rahul 2024-05-27

Source: provided

 பெங்களூரு : கர்நாடக காங்கிரஸ் அரசு அளித்த 5 முக்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப் பட்டுள்ளதாக ராகுல் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் விஜயநகராவில் நேற்று காங்கிரஸ் சார்பில் பேரணி நடைபெற்றது. இதில் கட்சியின் முக்கிய தலைவர்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பேரணியில் பேசிய ராகுல் காந்தி, "கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு ஆட்சியமைத்து 2 வருடங்கள் ஆகிறது. 5 முக்கிய வாக்குறுதியை நாங்கள் கொடுத்தோம். பா.ஜ.க.வும் மோடியும் காங்கிரஸ் கொடுத்த வாக்கை காப்பாற்றாது என்று கூறினர். ஆனால் 1 கோடி பெண்களுக்கு மாதம் ரூ.2000, ஒரு கோடி குடும்பங்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம், 4 கோடி பேருக்கு 10 கிலோ இலவச உணவு தானியங்கள், பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் ரூ.3000 உதவித்தொகை ஆகிய 5 முக்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

கர்நாடகாவில் நிறைய சமூக மக்கள் சொந்த நிலம் இருந்தும் அதற்கான பத்திர உரிமம் இல்லாமல் இருப்பதாய் நான் அறிந்தேன். இதுகுறித்து கட்சி மூத்த நிர்வாகிகளிடம் பேசினேன். இன்று கர்நாடக அரசு 1 லட்சம் குடும்பங்களுக்கு அவர்களின் நிலத்துக்கான உரிமத்தை வழங்க உள்ளது. அடுத்த 6 மாதங்களில் இது நடந்து முடியும். மேலும், கர்நாடகாவில் 2000 வருவாய் கிராமங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் 500 வருவாய் கிராமங்கள் அறிவிக்கப்பட உள்ளது. கர்நாடகாவில் எல்லோருக்கும் அவரவர் நிலத்துக்கான உரிமைகள் வழங்கப்பட வேண்டும்" என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து