முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மைதானத்தில் மோதிக் கொண்ட சம்பவம்: அபிஷேக்- திக்வேஷ் ரதிக்கு அபராதம்; : ஒரு போட்டியில் விளையாடவும் தடை

செவ்வாய்க்கிழமை, 20 மே 2025      விளையாட்டு
Hyderabad 2024-05-25

Source: provided

மும்பை : ஐதராபாத் வீரர் அபிஷேக் சர்மா மற்றும் லக்னோ வீரர் திக்வேஷ் ரதி இருவரும் மைதானத்தில் மோதிக் கொண்ட நிலையில், இருவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஐதராபாத் வெற்றி...

நடப்பு ஐ.பி.எல். தொடரின் லீக் சுற்றின் 61-வது போட்டி லக்னோவின் எக்கானா மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு (மே 19) நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஐதராபாத் அணி வெற்றி பெற்ற நிலையில், தோல்வியடைந்த லக்னோ அணி ஃபிளே-ஆப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் தொடரிலிருந்து வெளியேறியது.

வாக்குவாதம்...

இந்தப் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடிய அபிஷேக் சர்மா 20 பந்துகளில் 59 ரன்கள் எடுத்த நிலையில், லக்னோ வீரர் திக்வேஷிடம் விக்கெட்டை பறிகொடுத்தார். அபிஷேக் வெளியேறும் போது தனது வழக்கமான பாணியில் திக்வேஷ் கையெழுத்து கொண்டாட்டத்தில் ஈடுபட இருவருக்கும் இடையே வாக்குவாதமாக மாறியது.

சமாதானம்...

கள நடுவர்கள் மற்றும் அணி வீரர்கள் சேர்ந்து இருவரையும் விலக்கிவிட்டனர். மேலும், அபிஷேக் சர்மா, திக்வேஷ் ரதியின் முடியைப் பிடிப்பது போலவும் சைகை காட்டினார். போட்டி முடிந்ததும் இருவரும் சமாதனமாக மாறி, கை கொடுத்துக் கொண்டனர். பிசிசிஐ துணைப் பொதுச் செயலரும், காங்கிரஸ் எம்பியுமான ராஜீவ் சுக்லாவும் இருவரிடமும் சிறிது நேரம் இதுபற்றி பேசி சமாதானப் படுத்திக்கொண்டிருந்தார்.

அபராதமும், தடையும்...

இந்த நிலையில், கிரிக்கெட் திடலில் மோதிக் கொண்ட லக்னோ வீரர் திக்வேஷ் ரதிக்கு போட்டிக் கட்டணத்தில் 50 சதவிகித அபராதமும், ஒரு போட்டியில் விளையாடுவதற்கு தடையும் விதிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி 5 தகுதியிழப்பு புள்ளிகள் பெற்றதால், அடுத்து நடைபெறும் குஜராத்துக்கு எதிரான போட்டியில் விளையாடமாட்டார். ஐதராபாத் வீரர் அபிஷேக் சர்மாவுக்கு 25 சதவிகிதமும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

புதிதில்லை...

இதுபோன்று அபராதம் பெறுவதோ அல்லது சர்ச்சைகளில் சிக்குவது திக்வேஷூக்கு புதிதொன்றும் கிடையாது. இதற்கு முன்னதாக, பஞ்சாப் மற்றும் மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியிலும் இதுபோன்ற கொண்டாட்டத்தில் ஈடுபட்டதால் முறையே 25 மற்றும் 50 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து