முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விண்வெளியில் இருந்து தாக்கினாலும் பாதுகாப்பு: கோல்டன் டோம் அமைக்க அதிபர் டிரம்ப் தீவிர ஆர்வம்

புதன்கிழமை, 21 மே 2025      உலகம்
trump 2024-12-30

Source: provided

வாஷிங்டன் : அமெரிக்காவில் ஏவுகணை தாக்குதலில் இருந்து தற்காத்து கொள்ளும் வலிமையான பாதுகாப்பு அமைப்புகள் உள்ளன. அலாஸ்காவில், இடைமறித்து தாக்கும் அமைப்புகள் உள்ளன. இதுதவிர, வான் பாதுகாப்பு அமைப்புகளும் உள்ளன. அவற்றுடன் மற்றொரு புதிய பாதுகாப்பு அமைப்பாக கோல்டன் டோம் ஒன்றை நிறுவ அமெரிக்கா முடிவு செய்துள்ளது. 

இதுபற்றி அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கூறும்போது, குடியரசு கட்சி உறுப்பினரான அமெரிக்காவின் 40-வது ஜனாதிபதி ரொனால்டு ரீகன் இதனை அமைக்க விரும்பினார் என்றார்.

வெளிநாட்டு அச்சுறுத்தல்களுக்கு எதிராக ஏவுகணை பாதுகாப்பு கவசம் ஒன்றை கட்டமைப்பது என அமெரிக்க மக்களுக்கு, தேர்தல் பிரசாரத்தின்போது நானும் வாக்குறுதி அளித்திருந்தேன் என மீண்டும் கூறினார். இதன்படி, ரூ.14 லட்சத்து 97 ஆயிரத்து 833 கோடி (175 பில்லியன் அமெரிக்க டாலர்) திட்ட மதிப்பில் இந்த கோல்டன் டோம் கட்டப்பட உள்ளது என கூறினார். அதற்கான திட்ட வடிவமைப்பு இறுதி செய்யப்பட்டு விட்டது. இதனை விண்வெளி நடவடிக்கைகளுக்கான துணை தலைவர்க மைக்கேல் கட்லெயின் மேற்பார்வை செய்வார்.

இந்த டோம் முழு அளவில் கட்டி முடிக்கப்பட்டதும், உலகின் எந்த பகுதியில் இருந்து ஏவுகணைகள் ஏவப்பட்டாலும் அதனை இடைமறித்து தாக்கும் திறன் பெற்றிருக்கும். விண்வெளியில் இருந்து தாக்கினாலும் கூட அது முறியடிக்கப்படும் என்று டிரம்ப் கூறினார். இந்த திட்டம் முற்றிலும் அமெரிக்காவிலேயே உருவாக்கப்படும் என வலியுறுத்திய டிரம்ப், இஸ்ரேலின் அயன் டோமை அது ஒத்திருக்கும் என்றும் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து