முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அசோகா பல்கலை. பேராசிரியருக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால ஜாமீன்

புதன்கிழமை, 21 மே 2025      இந்தியா
Supreme-Court 2024-11-269

Source: provided

புதுடெல்லி : அசோகா பல்கலைக்கழகப் பேராசிரியர் அலி கான் மஹ்முதாபாத்துக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ள சுப்ரீம் கோர்ட், இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க ஹரியானா காவல்துறை இயக்குநர் ஜெனரலுக்கு உத்தரவிட்டுள்ளது. 

ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் அலி கான் மஹ்முதாபாத் வெளியிட்ட சமூக ஊடக பதிவுகளுக்கு எதிராக, ஹரியானா மாநில மகளிர் ஆணையத் தலைவர் ரேணு பாட்டியா புகார் அளித்திருந்தார். புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆரின் அடிப்படையில் அலி கான் மஹ்முதாபாத் கைது செய்யப்பட்டார். பா.ஜ.க. யுவ மோர்ச்சா பொதுச் செயலாளர் யோகேஷ் ஜாதேதியும் இதே போன்ற குற்றச்சாட்டுகளை கூறி மே 17 அன்று அலி கான் மீது தனியாக எப்.ஐ.ஆர் பதிவு செய்தார்.

இரண்டு வழக்குகளில் ஒன்றில் அலி கான் இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டார். யோகேஷ் ஜாதேதி தாக்கல் செய்த இரண்டாவது வழக்கில், அலி கான் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார். இந்நிலையில், சோனிபட் ராய் காவல் நிலையத்தில் தனக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகளை ரத்து செய்யக் கோரி மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் மூலம் அலி கான் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

அலி கான் சார்பில் ஆஜரான கபில் சிபல், முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப் பட்டிருப்பதைப் போல அலி கானின் சமூக ஊடகப் பதிவுகள் எந்த வகுப்புவாத பதட்டங்களையும் உருவாக்கவில்லை. அவரது சமூக ஊடகப் பதிவுகள் தேசபக்தியின் வெளிப்பாடு. அலி கான் மஹ்முதாபாத்தின் மனைவி 9 மாத கர்ப்பிணியாக உள்ளார்.” என வாதிட்டார். 

அலி கானின் பதிவுகள் ஆரம்பத்தில் போரின் கொடூரங்களை மையமாகக் கொண்டிருந்தாலும், அவை படிப்படியாக அரசியல் வர்ணனையை நோக்கி நகர்கின்றன. நாடு ஒரு பெரிய சவாலை எதிர்கொண்டுள்ள நேரத்தில், பொதுமக்கள் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கக்கூடிய இந்த நேரத்தில், பிரபலமடைய முயற்சித்தது ஏன்.” என்று நீதிபதி காந்த் கேள்வி எழுப்பினார்.

அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் அலி கான் மஹ்முதாபாத்திற்கு இடைக்கால ஜாமீன் வழங்கிய சுப்ரீம் கோர்ட், விசாரணையை நிறுத்த மறுத்தது. மேலும், அலி கானுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிக்க மூன்று பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவை மே 22, 2025-க்குள்அமைக்க ஹரியானா காவல்துறை இயக்குநர் ஜெனரலுக்கு சுப்ரீம் கோர்ட்உத்தரவிட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து