முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரக்கோணத்தில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

புதன்கிழமை, 21 மே 2025      தமிழகம்
ADMK 2025-04-18

Source: provided

அரக்கோணம் : அரக்கோணம் நேற்று அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த பருத்திபுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் 21 வயது கல்லூரி மாணவி தெய்வச்செயல் என்பவர் மீது அரக்கோணம் மகளிர் காவல் நிலையத்தில் மாணவி சமீபத்தில் புகார் அளித்தார். இந்த புகார் குறித்து காவல் துறையினர் முறையாக விசாரிக்கவில்லை என்று மாணவி தரப்பில் குற்றசம் சாட்டப்பட்டது.

இந்நிலையில், மாணவிக்கு ஆதரவாக அ.தி.மு.க. சார்பில் அரக்கோணம் பழைய பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதனடிப்படையில் நேற்று காலை 9.30 மணி அளவில் பழைய பேருந்து நிலையத்தில் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்ட்டம் நடத்த நகர காவல் நிலையத்தில் அனுமதி கேட்டு மனு அளித்தனர். இதற்கு காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது. இருப்பினும் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்ய 200- க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அ.தி.மு.க.வினர் தடையை மீறி முன்னாள் அமைச்சர் வளர்மதி தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அரக்கோணம் சட்டப்பேரவை உறுப்பினர் சு. ரவி, முன்னாள் மக்களவை உறுப்பினர் கோ.ஹரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் தெய்வச்செயலை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் வளர்மதி தலைமையிலான அ.தி.மு.க.வினர் அரக்கோணம் வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் சண்முகசுந்தரத்திடம், இவ்விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கவும், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளுடன் புகார் மனு அளித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து