முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உக்ரைன் ஆக்கிரமித்த இடத்தில் ரஷ்ய அதிபர் புதின் திடீர் பயணம்

புதன்கிழமை, 21 மே 2025      உலகம்
Putin 2024 08 11

ரஷ்யா, உக்ரைன் படைகள் ஆக்கிரமித்த குர்ஸ்க் பிராந்தியத்திற்கு ரஷ்யா அதிபர் பயணம் செய்துள்ளார்.

ரஷ்யா கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திடீரென உக்ரைன் மீது படையெடுத்தது. இரு நாட்டின் எல்லைகளில் உள்ள உக்ரைனின் பெரும்பாலான இடங்களை ரஷ்யா கைப்பற்றியது. பின்னர் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் (பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள்) உதவியுடன் ரஷ்யாவுக்கு உக்ரைன் பதிலடி கொடுத்தது. சில இடங்களில் ரஷ்யா பின்வாங்கியது. பின்னர் தரைவழி தாக்குதலை குறைத்துக் கொண்ட ரஷ்யா, உக்ரைன் மீது வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது. இதற்கு உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது.

இதற்கிடையே யாரும் எதிர்பார்க்காத வகையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் உக்ரைன் படைகள் நுழைந்தது. அப்பிராந்தியத்தில் உள்ள பல்வேறு நகரங்களை கைப்பற்றியது. இது ரஷ்யாவுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 2-வது உலகப் போருக்குப்பின் ரஷ்யா நிலப்பரப்பில் அடுத்த நாட்டின் ராணுவம் நுழைவது இதுவே முதல்முறையாகும். இதனால் உக்ரைன் படைகளை விரட்டியடிக்க ரஷ்யா ராணுவம் கடுமையாக சண்டையிட்டது.

கடந்த 26-ம் தேதி, குர்ஸ்க் பிராந்தியத்தில் இருந்து உக்ரைன் படைகள் முற்றிலுமாக விரட்டியடிக்கப்பட்டது என ரஷ்ய ராணுவம் தெரிவித்தது. ஆனால் உக்ரைன் அதிகாரிகள் இதை மறுத்தனர். இந்த நிலையில் ரஷ்ய அதிபர் புதின் குர்ஸ்க் பிராந்தியம் சென்றதாக, ரஷ்ய அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது. குர்ஸ்க் அணுஆயுத நிலையம்-2 கட்டப்பட்டு வருகிறது. இதை புதின் பார்வையிட்டுள்ளார். மேலும், குறிப்பிட்ட தன்னார்வலர்களுடன் ரகசியமாக பூட்டிய அறையில் ஆலோசனை நடத்தியுள்ளார். அத்துடன் பொறுப்பு கவனர் அலேக்சாண்டர் கின்ஸ்டெய்ன் உடனும் பேசியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து