முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முன்கூட்டியே துவங்குகிறது பருவமழை; கேரளாவில் 4 மாவட்டங்களுக்கு 'ரெட் அலெர்ட்'

செவ்வாய்க்கிழமை, 20 மே 2025      இந்தியா
Rain 2023-07-13

Source: provided

திருவனந்தபுரம் : கேரளாவில் நான்கு மாவட்டங்களுக்கு கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ள சுற்றுலாத்தலங்கள் மூடப்பட்டுள்ளன.

தென்மேற்கு பருவமழை கேரளாவில் அடுத்த 4 அல்லது 5 தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது. கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 4 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான 'ரெட் அலெர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவு, திடீர் வெள்ளம் ஏற்படும் பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வயநாட்டில் உள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டுள்ளன.

பேரிடர் மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. கனமழையால் திடீர் வெள்ளம், போக்குவரத்து இடையூறுகள் மற்றும் சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது. வானிலை அறிவிப்புகளைக் கண்காணித்து, வழங்கப்படும் அனைத்து ஆலோசனைகளின் படியும் விரைவாகச் செயல்படுமாறு அதிகாரிகள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து