முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இறந்த உடல்களை வைத்து பா.ஜ.க. அரசியல் செய்கிறது: டி.கே.சிவகுமார் விமர்சனம்

வியாழக்கிழமை, 5 ஜூன் 2025      இந்தியா
TK-Sivakumar

பெங்களூரு, பெங்களூரு கூட்ட நெரிசலை வைத்து பா.ஜ.க.வும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் அரசியல் செய்வதாக கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் விமர்சித்துள்ளார்.

ஆர்.சி.பி. வெற்றிக் கொண்டாட்டத்தையொட்டி ரசிகர்கள் திரண்ட சின்னசாமி ஸ்டேடியம் வெளியே நேற்று முன்தினம் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக டி.கே.சிவகுமார் நேற்று செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். ஐ.பி.எல். வெற்றி கொண்டாட்டங்களுக்கு காவல் துறை அனுமதி வழங்கவில்லை என்ற எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன்வைப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த டி.கே.சிவகுமார், "பா.ஜ.க.வினர் யாருக்கும் நான் பதில் சொல்ல விரும்பவில்லை. கர்நாடக மக்களுக்கும் நாட்டு மக்களுக்கும் மட்டுமே நான் பதில் சொல்ல வேண்டும்.

அனைத்து பா.ஜ.க.வினரும் முட்டாள்கள். பா.ஜ.க.வும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் [ஜேடி(எஸ்)] இறந்த உடல்களை வைத்து அரசியல் செய்கின்றன. இந்த சம்பவத்துக்கு மாநில அரசு முழுப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. நாங்கள் மிகவும் வேதனையடைந்துள்ளோம். பாதிக்கப்பட்டவர்கள் எங்கள் சொந்த குடும்பத்தினரைப் போன்றவர்கள். இந்த சம்பவத்தால், கர்நாடகாவும், பெங்களூருவும் தனது நற்பெயரை இழந்துவிட்டன. இதற்கு நாங்கள் பொறுப்பேற்கிறோம்.

இது மிகவும் எதிர்பாராத விதமாக நடந்திருந்தாலும், நாங்கள் மற்றவர்களைக் குறை கூறவில்லை. இவ்வளவு கூட்டத்தை யாரும் எதிர்பார்க்கவில்லை. 18 ஆண்டுகள் காத்திருப்பு (ஆர்.சி.பி.யின் வெற்றிக்கான காத்திருப்பு), இளைஞர்களிடையே எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எனக்குத் தெரியவில்லை. அவர்கள் அனைவரும் வந்தார்கள். அது விவாதத்திற்குரியது... விஷயங்கள் நடந்துவிட்டன. எங்கள் கட்சியும் இந்தப் பிரச்சினையில் மிகவும் அக்கறை கொண்டுள்ளது. இதற்கு ஒரு தீர்வைக் கண்டுபிடிக்க நாங்கள் முயற்சிப்போம்," என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து